பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

53


கதை கூறும் போக்குக் குறைவாக இருக்கலாம். இன்றும் கிராமப் புறத்தில் தாத்தா பாட்டிகள், பேரன் பேத்தி களுக்காகக் கதை கூறாமல் இல்லை.

ஆங்கிலேயர் உறவால் உரைநடை தமிழ் மண்ணில் உரமாகக் காலூன்றி தழைத்து வளரத் துவங்கிய பின்னர், அவர்களிடையே வளர்ந்திருந்த உரைநடையிலான சிறு கதை, புதினப் படைப்புகள் தமிழில் செழித்து வளரவே செய்தன.

இவ்விலக்கியப் படைப்புகள் தமிழில் படைக்கப்பட் டாலும் அவை ஆங்கில நாட்டின் போக்கையும் ஆங்கில மக்களின் மனப்பான்மையையும் எதிரொலிக்கும் படைப் புக்களாகவே அமையலாயின என்பது ஒப்பு முடிந்த உண் மையாகும். காரணம், ஆங்கிலேயர்களின் ஆட்சியின்கீழ் ஆங்கிலக் கல்வி கற்ற தமிழ்ப் படைப்பாளர்களால் உருவாக் கப்பட்டமையால் ஆங்கிலப் படைப்பிலக்கியப் போக்கு களை முற்றாகத் தவிர்த்து எழுத இயலாமற் போயிற்று.

ஆயினும், அன்றைய நம் நாட்டுச் சமூகச் சிக்கல் பல வற்றை அன்றையப் படைப்புகள் அலசுகின்ற முறையி லேயே உருவாக்கப்பட்டன. என்றாலும், அவற்றில் ஒருவித மிதவாதத் தன்மை இழையோடவே செய்தன.

ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ஃபிரெஞ்சு இலக் கியங்களைப் படித்த, தமிழ்ப் படைப்பிலக்கிய ஆசிரியர்கள் உருவாக்கிய படைப்புகளில் தீவிரத் தன்மையும் சமூக ஒழுக்கக் கேடுகளை உரமாக விவரிக்கும் போக்குகளும் மக்களாட்சிப் பண்பு பாராட்டும் தன்மைகளும் கொண்ட வையாய் அமைந்தன.

பொதுவுடைமைத் தத்துவங்களால் கவரப்பட்ட தமிழ்ப் படைப்பிலக்கிய வாதிகள் ரஷ்யப் படைப்பாளி களின் சிந்தனைச் செல்வாக்கால் தமிழ்ப் படைப்பிலக்கியங்