பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



களில் எதார்த்தப் போக்கையும் வர்க்க சமூக நிலையையும் கருவாகக் கொண்டு தங்கள் படைப்புகளை உருவாக்கினர்.

நாட்டு விடுதலைப் போராட்டம் மக்கள் இயக்கமாக உருவாகிய கால கட்டத்தில் தேசிய உணர்வையும் எழுச்சியையும் விடுதலைப் போராட்டத்தையும் கருவாகக் கொண்டு இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய தேசிய இலக்கியங்கள் மக்களிடையே விடுதலை வேட்கையும் தேசியப் பற்றும் பொங்கிப் பொழியச் செய்தன.

இவையெல்லாம் அவ்வக் காலப் போக்குகள். இலக்கியத்தில் பதித்துச் சென்ற படைப்புத் தடயங்களாகும். இவை தவிர்க்க முடியாதவையும் கூட.

இன்றைய அறிவியல் வளர்ச்சியின் விளைவாகப் பெருக்கமடைந்துள்ள செய்தித் தொடர்புச் சாதனங்கள் உலகை வெகுவாகக் குறுக்கி விட்டன. உலக மக்களிடையே என்றுமில்லாத நெருக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. உலகின் நிலையையும் போக்கையும் நம் வீட்டுத் தொலைக்காட்சி தெளிவாகவும் விளக்கமாகவும் நம் வீட்டு வரவேற்பறை வரை கொண்டு வந்து நமக்கு எடுத்து விளக்குகிறது.

இந்தச் சூழலில் அறிவியல் வளர்ச்சித் தாக்கத்தால் உலகெங்கும் அறிவியல் புனைகதை இலக்கியத் துறை வளமாக வளர்ந்து வரும் நிலையில் அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் மொழியின் அறிவியல் புனைகதை இலக்கியம் செழுமையாகப் பூத்து மலரவில்லையே? இதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டாமா?

அடிப்படைக் காரணம் என்ன?

அண்மைக் காலம்வரை தமிழில் அறிவியல் புனைகதைப் படைப்புகள் பெருமளவில் உருவாகாமற் போனதற்