பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

55


கான அடிப்படைக் காரணத்தை அறிவது மிக மிக அவசியமாகும். இன்றைய நிலையையும் எதிர்கால வளர்ச்சிப் போக்கையும் அளந்தறிய இஃது அவசியம் எனக் கூற வேண்டியதில்லை.

முதலில் நம் வாசகர்களின் மனப்போக்கையும் கதை இலக்கிய எதிர்பார்ப்புகளையும் பார்த்தால் அவர்கள் நீண்ட காலமாக ஏதோ ஒருவித மனப்போக்கில் அழுத்தம் பெற்றவர்களாக, அதற்கேற்ப வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது புலனாகும். சாதாரண மனித இயல்புகளையே பல்வேறு கோணங்களில் சளைக்காமல் திரும்பத் திரும்பச் சித்தரிக்கும் பாத்திரப் படைப்புக்களைக் கொண்ட புனைகதைகளைப் படிப்பதன் மூலமாக வாசகர்களின் உணர்வுகளும் சிந்தனைகளும்கூட மந்தப் படுத்தப்பட்டிருப்பதை எளிதாக அறியலாம். கதை சொல்லும் திறமை கைவரப் பெற்ற சில படைப்பாளர்கள் பாலுணர்வு பொங்கும் வெப்பக் கதைகளின் மூலம் வாசகர்களைத் தம் பிடிக்குள் வைத்திருக்க முயல்கிறார்கள்.

பொதுவாகப் பார்க்கும்போது ஆண் வாசகர்களுக்கும் பெண் வாசகர்களுக்குமிடையே குறிப்பிடத்தக்கக அளவில் வேறுபாடுகள் இருப்பதை யாரும் மறுக்கவியலாது. இன்னும் சொல்லாப்போனால் கதை இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தமட்டில் ஆண்களைவிடப் பெண் வாசகர்களே அதிகமாகக் கதைப் படைப்புகளைப் படிக்கக் கூடிய வர்களாக உள்ளனர் என்பது ஒரு கசப்பான உண்மை.

ஆண் வாசகர்களும் நொக்கு, நொறுவல்களும்

பல்வேறுபட்ட பருவ இதழ்களைப் படிக்கக் கையிலெடுக்கும் ஆண்கள் ஆர்வத்தோடு பக்கங்களைப் புரட்டி, ஆங்காங்கே இடம் பெற்றுள்ள நகைச்சுவைத் துணிக்குகள், செய்தித் துணுக்குகள், ஒரு பக்கத்துக்கு மேற்படாத கட்டு