பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

61


மேலை நாட்டார் உருவாக்கிய இந்நிலை, காலணி நாடுகளிலெல்லாம் கூட பரவும் நிலை ஏற்பட்டன. எனினும், ஏற்பட வேண்டிய அளவுக்கு அறிவியல் இலக் கியத் தாக்கம் இங்கு படைப்பிலக்கியப் போக்கில் உருவாகாமைக்குக் காரணம் சமயத் தாக்கம் இருந்த அளவுக்கு அறி வியல், தொழில் நுட்பத் தாக்கம் படைப்பாளர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் இல்லாமற் போனதுதான்.

மேலை நாட்டில் கூட பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் புனை கதைகள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை மக்களின் ஆதரவை இருபதாம் நூற்றாண்டில் தான் அதிக அளவில் பெற முடிந்தது.

தொடக்கத்தில் எழுதப்பட்ட அறிவியல் புனைகதைகளை மக்கள் மத்தியில் நன்கு செல்வாக்குப் பெற்ற இதழ்கள் துணிந்து வெளியிட முன்வரவில்லை. இவ்வறிவியல் புனைகதைகள் மக்களின் கவனத்தை ஈர்க்குமா என்ற ஐயப்பாடு இருந்தது. இதனால் அத்தகைய படைப்புகள் இரண்டாந்தர, மூன்றாந்தர இதழ்களிலேயே வெளியாகின. அவையும்கூட மக்களின் உணர்வைத் தூண்டும் வகையில் இப்படைப்புகளை கவர்ச்சிப் படங்களோடு வெளியிட்டன. படங்களை ரசித்த மக்கள் கதைகளையும் ரசிக்கத் தொடங்கினார்கள். வழக்கமான கதையம்சங்களிலிருந்து மாறுபட்டி ருந்த அறிவியல் புனைகதைகள் மக்களின் ஆர்வத்தைத் தூண்டின. வெறும் கற்பனைக் கதைகளையே படித்து வந்த வாசகர்கட்கு உண்மையின் அடித்தளத்தில் பின்னப்பட்ட இக்கதைகளின் கருவும் உருவும் புதுமையாகப்பட்ட தோடு தங்கள் வாழ்க்கையே உள்ளது உள்ளபடி அறிந்துணரும் வாய்ப்பாகவும் அமைந்தது. இதனால் இக்கதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களின் தொகையும் விரைந்து பெருகலாயிற்று. இப்புதிய போக்கை அறிந்த முதல் தர ஏடு