பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



பதில் காட்டும் ஆர்வத்தில் இறைந்தது பத்து விழுக்காடுகூட அறிவியல் பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டும் அறிவியல் புனை கதைகளுக்கு இடமளிக்க விரும்புவதில்லை. இதனால் அரிதாக உருவாகும் அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கி யங்கள் இதழ்கள் வாயிலாக எளிதில் வெளிவந்து வாசகர்களை அடைய வழியில்லாமற் போய்விடுகிறது. இவ்வகையில் தமிழ்ச் சிற்றிதழ்கள் ஒரளவு ஆர்வம் காட்டுவது சற்று ஆறுதல் அளிப்பதாயுள்ளது.

இதே போன்ற சூழல் ஆங்கில இலக்கிய உலகில் நிலவியபோது அச்சூழலை மாற்ற அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகள் சுவையான வரலாறாகும். இச்சூழலின் போக்கை முன்பே ஓரளவு சுட்டிக் காட்டியுள்ளேன்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழியில் அறிவியல் புனைகதைகளை எழுத ஆரம்பித்தனர். இவைகளை அக்காலத்தில் சிறந்த இதழ்கள் எனப் போற்றப்பட்ட இதழ்கள் எதுவும் வெளியிட முன்வரவில்லை என்பதை முன்பே பார்த்தோம். எனினும் , அக்கால அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் இதற்காக மனம் சோர்ந்து விடவில்லை. புதிதாக முளைவிட்டிருக்கும் புதுவகையான இலக்கிய வடிவத்தை ஏற்க, சிறிது காலம் பிடிக்கவே செய்யும். அதுவரை காத்திராமல், எதிலாவது அவற்றை வெளியிட்டு வாசகர்களிடையே ஆர்வத் தூண்டலை உருவாக்க முயல்வதே புத்திசாலித்தனம் எனக் கருதி அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு
களை தரம் குறைந்த இதழ்களில் வெளியிடலாயினர். இவ்விதழ்கள் தாங்கள் வெளியிடும் படைப்புகளைவிட அவற்றிற்கான படங்களிலே அதிகக் கவனம் செலுத்திவந்தன. பகட்டான படங்கள் மூலம் வாசகர்களை ஈர்ப்பதே அவற்றின் நோக்கமாகும். நாளடைவில் இத்தகைய அறிவியல் புனைகதைகளை வெளியிடுவதற்கென்றே இதழ்