பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

67



எது அறிவியல் புனைகதை

இப்படியொரு கேள்வியை யாராவது எழுப்பினால் அதற்கான விளக்கத்தை இத்துறை தொடர்புடையவர்கள் அவரவர் மனப் போக்குக்கும் அறிவியல் அறிவுக்குமேற்ப வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கிய ஆசிரியர்களும் நூல் பதிப்பாசிரியர்களும் தாங்கள கூறும் விளக்கமே பொருத்தமானது எனத் தர்க்கம் செய்வோரும் உண்டு. அவரவர் கண்ணோட்டத்தில் அஃது சரியாகவும் இருக்கலாம். இவற்றினூடே “அண்ட வெளி நடனக்காரர்கள் (Cosmic Dancers) என்ற படைப்பில் எல் லோரும் ஒரளவு ஏற்கும் வண்ணம்,

"அறிவியல் புனைகதை என்பது, அறிவியலிலும் சமு தாயத்திலும் ஏற்படும் மாறுதல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள புனைகதை வகையாகும். நிலையான அறிவியல் வாய்பாடுகளுக்கு எதிரான அறிவாராய்ச்சி விரிவாக்கம், புலனாய்வு, பெருமாற்றம் ஆகியவற்றை அது கூறுகிறது.நிலையான வாய்பாட்டை விடுத்து மாறுதலுக்கு இடமளிப்பதாயும் இயற்கையுடன் இயைந்ததாயும் இருக்கக் கூடிய புதிய கண்ணோட்டத்தை உருவாக்குவது இப்புனைகதை வகையின் நோக்கமாகும்."

என்ற இவ்விளக்கம் இத்துறை பற்றிய பல ஐயப்பாடுகளை அகற்றி தெளிவேற்படுத்துகிறது. பல புதிய உண்மைகளையும் புலப்படுத்துகிறது.

ஆனால், இந்த உணர்வின் அடிப்படையில் தமிழில் அறிவியல் புனைகதை இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றனவா என்ற கேள்விக்கு உரிய பதில் பெறுவது அவ்வளவு எளிதல்ல.

அறிவியல் புனைகதை முயற்சிகள் சென்ற சில ஆண்டுகளாக ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்டு வந்த