பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

நுழைவாயில்

அறிவியல் வளர்ச்சியின் வேகத்திற்கேற்பத் தமிழன் விரைந்து முன்னேற வேண்டியது காலத்தில் கட்டாயமாகும். அதற்கு அருந்துணையாக அமையவல்ல அவனது தாய்மொழியாகிய தமிழை அறிவியல் மொழியாக வலுவோடு வளர்க்க வேண்டியது காலத்தில் இன்றியமையாத் தேவையாகும்.

இயல்பாகவே ஆற்றல்மிக்க அறிவியல் மொழியாக அறிவியலைச் சொல்லுவதற்கென்றே உருவான மொழியாக தமிழ் அமைந்திருந்தபோதிலும் அதனை நீண்ட நெடுங்காலமாக இலக்கியத் துறைக்கும் சமயத் துறைக்கும் சமயம் சார்ந்த தத்துவத் துறைக்கும் பெரும்பான்மை பயன்படுத்த நேர்ந்தமையால் அஃது இலக்கிய மொழியாக சமய மொழியாக - தத்துவ மொழியாக தோற்றம் பெற்றுவிட்டது. இன்றையக் காலப்போக்கும் சூழலும் தமிழ் தன் ஆற்றலை - திறத்தை - அறிவியல் மொழியாக வெளிப்படுத்தி நிலை பெற வேண்டியதாக உள்ளது. அதற்கேற்ப மொழி சார்பான நம் முயற்சிகளும் அமைய வேண்டியது அவசியமாகி விட்டது. அதன் ஒரு பகுதிதான் அறிவியல் புனைகதை முயற்சி. இது காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப அமைய வேண்டிய இன்றியமையா இலக்கிய முயற்சியுமாகும்.

இன்று மேனாட்டில் அறிவியல் செய்திகள் அனைத்து வகையான இலக்கிய வடிவங்களிலும் அரசோச்சி வருகின் றன. கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் என அனைத் துமே அறிவியலை அடித்தளமாகக் கொண்டு பின்னப்படு கின்றன. ஆய்வின் அடிப்படையில் காரண, காரியங்களோடு அதன் கருப்பொருள் அமைவதால் அவை மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து மகிழ்வூட்டுகின்றன. இதனால்