பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



போதிலும் அவை பெரும் வெற்றிக்குரியனவாக அமையா தது நம் முனைப்பான ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

அறிவியல் அறிவும் படைப்புத் திறனும்

அண்மைக்காலம் வரை தமிழ் இலக்கியப் புனைகதை படைப்புத் திறனைப் பொறுத்தவரை படைப்பாற்றலும் கற்பனைத் திறனும் இருந்த அளவுக்கு அறிவியல் அறிவு நிரம்பப் பெற்ற படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் குறிப்பி டத்தக்க அளவில் தமிழில் இல்லை என்றே கூற வேண்டும். இவர்களுள்ளும் அறிவியல் கல்விகற்றவர்கள் இருந்த போதிலும் அறிவியல் நுட்பங்களை உணர்ந்து தெளிந்து, அவற்றைப் பாத்திரப் படைப்புகள் மூலம் கதைப் போக்கில் தெளிவுபடக் கூறக் கூடியவர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லை என்றே கூற வேண்டும்.

அறிவியல் புனைகதைப் படைப்பாசிரியர்களாக அமைய வேண்டுமெனில் அதற்கு இலக்கியப் புலமையோ கற்பனை வளமோ, சொல்லாட்சித் திறனோ. பாத்திரப் படைப்பாற்றலோ மட்டும் போதாது. அவைகட்கொப்ப அறிவியல் அறிவும் தெளிவும் அவசியம். சராசரிக்கு மேற்பட்ட அறிவியல் நுட்ப அறிவு தேவை. சுருங்கச் சொன் னால் தமிழறிவோடு அறிவியல் நுட்பப் புலமையுடையவர் களாக அமைதல் வேண்டும். இதற்குப் போதிய ஆங்கிலப் புலமையுடையவர்களாக இருப்பதோடு, ஆங்கில மொழி யில் எழுதப்பட்ட அறிவியல் புனைகதை இலக்கியப் படைப்புகளின் பரிச்சயமும் அவற்றின் பாதிப்பும் உடைய வர்களாக இருந்தால் மட்டுமே இயலும் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். ஆங்கில மொழிப் புலமையும் அறி வியல் கல்விச் சிறப்பும் பெற்ற பல பேர் இருந்த போதிலும் அவர்கள் தமிழைப் படிப்பதிலும் தமிழில் எழுதுவதிலும் ஆர்வமில்லாதவர்களாக இருந்ததினால் கடந்த காலத்தில்