பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

69



திறம்பட்ட அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் தமிழில் உருவாக இயலாமல் இருந்து வந்தது. இந்நிலை அண்மைக் காலம் வரை தமிழில் தொடர்ந்து இருந்து வந்த நிலையாகும்.

மாறிவரும் காலப் போக்கு!

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்போக்கு மாறி வருகிறது எனலாம். அறிவியல் கல்வி பெற்றவர்களின் தொகை இரு பாலாரிலும் இன்று மிகுந்து வருகிறது. மேலும் அறிவியல் கல்வி பெறும் பெண்டிரின் தொகை மிகுந்து கொண்டே வருகிறது. அதிலும் கணிசமான அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
==
 ==
மேலும், மேனாட்டில் அனைத்து மட்டத்திலும் அறிவியலின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. படைப்பிலக்கியத்திலும் அதன் அழுத்தம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. கதை இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அனைத்து இலக்கிய வடிவங்களிலும் அறிவியல் தாக்கம் படிவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்நிலையில் அறிவியல் தாக்கமில்லாத படைப்பிலக்கியம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு நிலமை மாறிக்கொண்டு வருவதன் எதிரொலி தமிழ்ப் படைப்பிலக்கியத்திலும் படிவது இயல்பேயாகும். எனவே தமிழ்ப் படைப்பிலக்கிய ஆசிரியர்களும் அறிவியல் புனைகதை இலக்கியங்களை உருவாக்க விழைவது இயல்பே.

தமிழறிவோடு ஆங்கில அறிவும் ஆங்கில அறிவியல் படைப்பிலக்கியப் பரிச்சயமும் அறிவியல் கல்வியும் பெற்ற இவர்கள் மேற்கொண்ட அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கிய முயற்சி வியக்கத்தக்க அளவில் அமையாவிடினும் குறிப்பிடத்தக்க அளவிலேனும் அமைந்ததை குறிப்பிட்டே