பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



யாக வேண்டும். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக சுஜாதா (ரங்கராஜன்), மாலன், சுப்ரபாலன். ஶ்ரீதர், சிவசங்கர் போன்றவர்களையும் சிறுவர் அறிவியல் இலக்கியத்தைப் பொறுத்தவரை பூவண்ணன், கல்வி கோபாலகிருஷ்ணன், ரேவதி (ஹரிஹரன்), மலையமான் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்களின் முயற்சியும்கூட ஆரம்ப முயற்சி என்ற அளவிலேயே அமைகிறதேயொழிய முழுமையான அறிவியல் புனைகதை இலக்கியப் படைப்புகள் என்ற முறையில் அமையவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

இன்றையச் சூழலில் கல்வி சிற்றுர்வரை சென்று புதிய படிப்பாளிகளை உருவாக்கிக் கொண்டு வருகிறது. அறிவியலறிவும் அங்கெல்லாம் பரவி அழுந்தக் காலூன்றி வளர்ந்து வருகிறது. அறிவு வளர்ச்சியோடு திறனாய்வுப் போக்கும் செழுமை பெற்று வருகிறது.

தற்போது பெண் கல்விக்கு எல்லா மட்டத்திலும் உதவியும் உற்சாகமும் ஊட்டப்படுகிறது. ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்படுவதால் படித்த பெண்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் கூடிக் கொண்டே வருகிறது. இதில் உயர் கல்வி, தொழில் நுட்பப் படிப்பு படித்தவர்களின் தொகை கணிசமான அளவில் பெருகிக் கொண்டு வருகிறது. இத்த கைய சூழ்நிலையில் நூல்கள், இதழ்கள் மூலம் புனைகதை படிக்கும் படிப்பாளிகளின் தொகையும் கூடிக் கொண்டே செல்கிறது எனக் கூறவேண்டியதில்லை.

முன்பெல்லாம் குடும்பப் பின்னணியில் சிக்கல் களைப் பற்றி விவாதிக்கும் கதைகளைப் படிப்பதிலும் அவைகளைப் பற்றி அசைபோடுவதிலும் ஆர்வம் காட்டி வந்த பெண் வாசகர்களிடையே அறிவுப்பூர்வமான அறிவியல் புனைகதைகளையும் படிப்பதில் நாட்டமுள்ளவர்