பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

71



களாக மாறி வருகிறார்கள் என்பது பல்வேறு ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. இத்தகைய மாற்றத்திற்கு மற்றொரு சிறப்புக் காரணம் ஆங்கில மொழி நூல்களைப் படிப்ப தாலும் அவற்றில் இடம் பெற்றுள்ள அறிவியல் பூர்வமான செய்திகள் அவர்களிடையே ஏற்படுத்தி வரும் தாக்கமுமாகும்.

{{ }}இவ்வாறு இருபாலாரிடமும் இளைய சமுதாயத்தினரிடமும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் வெறுமனே உணர்வுகட்கு மட்டும் இரைபோடும் கற்பனைக் கதைகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டாது; அறிவுக்கு விருந்தூட்டும் அறிவியல் புனைகதைகளைப் படிப்பதிலும் ஆர்வம் மிக்கவர்களாக உருமாறி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

சின்னத்திரையின் சிந்தனைத் தூண்டல்

{{ }}அறிவியல் புனைகதை ஆர்வப் பெருக்கிற்குரிய வேகமுடுக்கியாகச் சின்னத்திரை விளங்கி வருகிறது. இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் காட்டிவரும் அறிவியல் புனைகதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அறிவியல் ஆய்வாளர்களிடையே நல் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. நாம் விரும்பிக்கேட்காமலே அவை இத்தகைய அறிவியல் நிகழ்ச்சிகளை, திரைப்படங்களை அடிக்கடி ஒளிபரப்பி வருகின்றன. வியப்புணர்வோடு அவற்றை நோக்கும் பார்வையாளர்கள், பெரும்பாலும் பெண்கள், அவர்கள் அறியாமாலே அவற்றில் மனம் தோய்கின்றனர். நவீன கருவிகளின் துணையோடு புதிய உத்திகளைக் கையாண்டு, நம்மைப் பிரமிக்கச் செய்யும் வகையில் அவை அமைந்திருப்பதால் அவற்றைக் காண்பதோடு மட்டுமல்லாமல் அம்மாதிரியான அறிவியல் புனை கதைகளைப் படிப்பதிலும் பேரார்வம் காட்டுகின்றனர். ஆங்கில அறிவு மிக்கோர் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள