பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

74 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

இத்தாக்கங்கள் அறிவியல் புனைகதைகள் தமிழில் படைக் கப்படுவதை ஊக்குவிக்கும் உணர்வுகளாக அமைகின்றன என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இத்தகைய இலக்கியப் போக்கை ஒரு வகையில் காலக்கட்டாயம் என்று கூட கூறலாம்.

 மேலும், இன்றையக் காலப்போக்கும் சமூகச்சூழலும் வெறும் உணர்வபூர்வமான கதைகளும் காதல் மயக்கக் கதைகளும் இளைய தலைமுறையை ஈர்க்கத் தவறி விடுகின்றன. அவை ஓரளவுக்கு உதரசீனப்படுத்தப் படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் வெறுத்து ஒதுக்கப்படுகின்றன. 'பொழுது' என்பது கவைக்குதவாதவற்றைப் படித்து வீணே போக்குவதற்கானது அல்ல; புரியாதவற்றை புரிந்து கொள்ளவும் அறியாதவற்றை அறிந்துகொள்ளவும் பயனுள்ள முறையில் செலவழிக்கப் பயன்படுத்துவதற்கான என்ற உணர்வை இன்றையக் கல்வியும் படிப்பறிவின் பல்வேறு பரிமாணங்களும் ஊட்டத்தவறவில்லை. எனவே, இதற்கெல்லாம் மாறாக இன்றையத் தமிழ் வாசகர்களி டையே வேகமாக அழுத்தம் பெற்று வருவது, அறிவியலை அடிப்படையாகக்கொண்ட புனைகதை இலக்கியங்களே யாகும் என்பதை நாம் ஓரளவு உணர்ந்து தெளிவது நல்லது.

ஆர்வத்துண்டல் இல்லா அறிவியல் புனைகதைப் படைப்புகள்

 அண்மைக்காலம்வரை, தமிழ்ப் படைப்பாசிரியர்களோ இதழாளர்களோ வாசகர்களோ அறிவியல் புனைகதை இலக்கியம்பற்றி அதிக ஆர்வமோ அக்கறையோ கொண்டிருந்ததாகக் கருத முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் 'வழக்கமான கற்பனைக் கதைகளில் காட்டும் ஆர்வத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட அறிவியல் புனைகதைகளின்பால் இம் முத்தரப்பினரும் காட்டினார்கள் எனக் கூற முடியவில்லை.