பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது

தொடக்க காலத்தில் அறிவியல் புனைகதைகளை உரு வாக்க முனைந்தவர்கள் பழைய புராணக் கதைகளைப் போன்று கற்பனையும் அதிசயமும் கலந்த நிலையில், புராணக் கதைகளைப் போன்றே எழுதலாயினர். இவற்றில் அறிவியல் உண்மைகளைக் காட்டிலும் அற்புதங்களும் மாயங்களுமே அதிகம் இடம் பெற்றன. இவை அறிவி யலின் பெயரால் புனையப்பட்ட கற்பனைப் படைப்பு என்பதைத் தவிர வேறு சிறப்பு எதுவுமில்லை.

அறிவியல் உண்மைகளைக் கதைப் போக்கில் பாத்தி ரங்கள் வாயிலாக சமுதாயப் போக்கைச் சித்தரிக்கும் நிகழ்ச் சிகள் மூலம் விளக்க வேண்டும் என்ற எண்ணமிருந்த போதிலும் படிப்போர்க்குச் சுவையூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் வரம்பிகந்த நிலையில் கற்பனை கலக்க, அப்ப டைப்பு அறிவியலை விட்டுத் தடம்புரண்டதோடு அறிவிய லுக்கு எதிரான போக்குகளைக் கொண்டதாக உருப்பெற்று விடுவதும் உண்டு. சான்றாக, எந்திரமனிதனைக் கதையின் ஒரு பாத்தரமாக்கி, கதையை உருவாக்கும்போது, நாம் முன்னதாக இட்டுள்ள கட்டளைகளின் பதிவுப்படிதான் எந்திர மனிதனால் இயங்க முடியும் என்ற எதார்த்த உண்மைக்குப் புறம்பாக எந்திர மனிதனுக்கு அளவுக்கதிக மான முக்கியத்துவம் தரும் வகையில் எந்திரமனிதன் சாதா ரண மனிதனைவிட முனைப்பாகச் சிந்திக்கும் ஆற்றலுள் ளவன் என்பது போலவும், உணர்ச்சிவசப்படும் தன்மையு டையவன் என்பது போலவும், உணர்ச்சி வசப்படும் தன்மை யுடையவன், அதன் மூலம் பாசம் காட்டவும் வெறுப்பு ணர்வால் பிறரைப் பழிவாங்கவும் முடியும் என்ற முறையில் உருவாக்கும்போது எதார்த்த அறிவியல் உண்மைக்குப் புறம் பான முறையில் எந்திரமனிதனைத் சித்தரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.