பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



அறிவியல் புனைகதையின் ஆணிவேர் புராணக் கற்பனையே

அறிவியல் புனைகதை வளர்ச்சி வரலாற்றை ஆராய முற்பட்டால், நீண்ட நெடு நாளைக்கு முன்னரே அஃது முளைவிட்டுத் துளிர்த்து வளர்ந்து வந்துள்ள சுவையான வரலாற்றை நம்மால் அறிந்துணர முடியும்.

சாதாரணமாக அறிவியல் புனைகதை இலக்கியம் என்று கூறியவுடன் நம் சிந்தனை தொழிற்புரட்சிக்கு முன்னும் பின்னுமாக நகரத் தொடங்குவது இயல்பே. அறிவியல் மறுமலர்ச்சிக் காலப்போக்கை அடித்தளமாகக் கொண்டு வருங்காலப் போக்கைக் கற்பனைக் கதைகளாக வடித்துத் தந்த வெர்னர், ஹெச்.ஜி.வெல்ஸ், ஐசக் அசிமோவ், ப்ராட் பரி போன்ற அறிவியல் புனைகதை இலக்கிய மேதை களைச் சுற்றியே வட்டமிடத் தொடங்குகின்றன.

ஆனால், அறிவியல் புனைகதை வரலாற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது இஃது அண்மையில் தோன்றிய புதுவகை இலக்கியத் துறைதானா? என்ற ஐயம் வலுவாக எழவே செய்கிறது.

ஆழ்ந்து நோக்கின் அறிவியல் புனைகதை என்ற மகு டத்தைத் தாங்காமலே இத்துறை பன்னெடுங்காலமாக புராணக் கதைகளாகவும் கிராமியப் படைப்புகளாகவும் உலவிக் கொண்டுதான் உள்ளன. மறைபொருள் நூல்களில் விவரிக்கப்படும் எத்தனையோ தகவல்கள் மற்றும் உலோகங்களைப் பொன்னாக உருவாக்க முயலும் இரசவாதக் கலை, கட்டிடக் கலை, மந்திர மற்றும் சமயச் சிற்பக் கலைகளும்கூட அறிவியல் புனைகதை வளர்ச்சிக்கு ஆதாரமாய மைந்துள்ளதை நம்மால் உணர முடிகிறது.

பல்வேறு கோளங்களில் இறையம்சமுடையவர்களும் மாறுபட்ட வடிவங்கொண்ட மனிதர்களும் இருந்ததாக நம்