பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



மேலை நாட்டு இக்காரஸ் புராணத்தில் வரும் டீடாலஸ் என்பவன் கலைஞனாகவும் அறிவியல் அறிஞனாகவும் விளக்கப்படுகிறான். தன் மகன் கிரீட் வீரன் 'விண்வெளி வீரனாக வானில் உலா வர பெரும் முயற்சி செய்து உருவாக்கிய இறகுகளைக் கொண்டு பறக்கச் செய்தான் எனக் கூறுகிறது.

டீடாலஸ், தான் செய்த சிலைகளுக்கு உயிரூட்டம் தந்து இயங்கச் செய்தான் என்ற தகவல் இன்றைய இயங்கும் 'எந்திர மனிதர்'களை நினைவூட்டவில்லையா? டீடாலசின் இயங்கு சிலைகளை அன்றைய எந்திர மனிதர்களின் முன்னோடி என்று ஏன் கருதக் கூடாது?

அன்றைய புராணத்தில் விவரிக்கப்பட்ட கலைத் திறனும் கட்டுமான ஆற்றலும் புதியன புனையும் அறிவியல் கற்பனை வளமும் கொண்ட டீடாலசின் மறு வடிவாக மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய லியோனார்டோ டா வின்சியைக் கூறலாம்.

லியோனார்டோ டா வின்சி கற்பனைத் திறன்மிக்க ஒவியர் கட்டிடக் கலைஞர்; படைத்துறைப் பொறியாளர்; இயற்பியலார்; எழுத்தாளர்; இயந்திர அமைப்பு நுட்ப வல்லுநர்.

ஒரு சமயம் இவர் பறவைகள் வானில் பறப்பதைக் கூர்ந்து கவனித்தார். டீடாலஸ் தன் மகன் வானில் பறக்க உருவாக்கிய இறகுகள் பற்றிய வர்ணனைச் செய்திகள் அவர் கவனத்திற்கு வந்தன. அதன் அடிப்படையிலேயே விண்ணில் பறக்கவல்ல வானூர்தியை ஒவிய வடிவில் வடிவமைத்தார். அதுவே ஒரு சில பொறியமைவு மாற்றங்களுடன் 'ஹெலிகாப்டராக' இன்று உலகெங்கும் புற்றீசல் போல் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன.