பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

84 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

அதை இறைச் சக்தியாகவும் அதனையொட்டி புராண நிகழ்ச் சியாகவும் சித்தரிக்கப்படலாயிற்று என்பது வரலாறு தரும் உண்மை.

 நீண்ட காலத்திற்குப் பிறகே காந்த இரும்பை ஈர்ப்ப தாலேயே இஃது நேர்கிறது என்பதை உணர்ந்து, மர ஆணிகளைக் கொண்டு அவ்வழி செல்லும் கப்பல்கள் கட்டப்பட்டன என்ற தகவலை நிலவியல் வல்லுநரான தாலமி விவரிக்கிறார். 'ஆயிரத்தொரு இரவுகள்' அரபுப் புனைகதைகளிலும் காந்தமலை கப்பல் ஈர்ப்புச் செய்திகள் விவரிக்கப்பட்டன. காந்தத்தைப் பற்றிய 'அறிவியல் பூர்வமான கோட்பாடுகள்' உருவான 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே இக்க தைகளை நம்பும்மனப்பான்மை மக்களிடம் விடைபெற்ற தெனலாம்.

தற்செயலாக அறிவியல் கண்டுபிடிப்பு

 அறிவியலைப் பொறுத்தவரை அனுமானமும் அதன் வழியான கற்பனையும் ஆய்வுகளால் உண்மை வடிவெடுப் பதுண்டு.
 எதிர்பாரா நிலையில் ஒன்றை ஆய்வு செய்யும் போதும் எதிர்பாரா நிலையில் வேறொன்று புதிய கண்டுபி டிப்பாக வந்து அமைவதுண்டு சான்றக. ஹென்றி பெக்கரல் எனும் அறிவியல் ஆய்வறிஞர் யுரேனியம் ஆக்சைடை தற்செயலாகப் பயன்படுத்த முனைந்தபோது, எதிர்பாராத நிலையில் கதிரியக்கம் பற்றி அறிய நேர்ந்தது. அதே போன்று டொனால்ட் கிளேசர் என்பார் ஒரு குவளையில் இருந்த பீர் மதுபானத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாரா வகையில் 'குமிழி அறை' எனும் உண்மையைக் கண்டறிய நேர்ந்தது.
 அதே போன்று அலெக்ஸாண்டர் பிளெமிங் என்ற விஞ்ஞானி முந்தைய ஆய்வின்போது சோதனைக் கண்