பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

மணவை முஸ்தபா 85

ணாடி மீது படிந்திருந்த பூஞ்சைக் காளான்களை வழித்தெரிய அது எதிர்பாராமல் புண் மீது பட்டுகாய நேர்ந்தபோதுதான்'பென்சிலின்' மருந்தைக் கண்டுபிடிக்க நேர்ந்தது.

 இன்றைய பசுமைப் புரட்சிக்கு ஆதார சுருதியாக விளங்கும் வேளாண்பொருள் செயற்கை உரமாகும். அதுவும் எதிர்பாரா நிலையிலேயே கண்டு

பிடிக்கப்பட்டது.

 ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி லைபிக் என்பவர் 1800ஆம் ஆண்டின் எரிந்த தாவரங்களின் சாம்பலில் பாஸ்ஃபேட்டும், பொட்டாஷ் உப்பும் இருப்பதையும், ஆவியில் அம்மோனியா இருப்பதையும் கண்டுபிடித்தார். வறண்ட நிலத்தில் இம்மூன்றையும் பயன்படுத்திப் பார்த்தார். மிகுந்த பயன் கிட்டியது. அதன் மூலம் வேளாண் வேதியியல் வளர்ச்சி வழிபிறந்தது. செயற்கை உரம் தயாரிக்கப்பட்டு ஐரோப்பா முழுமையும் பயன்படுத்தப்பட்டது. விளைச்சல் பன்மடங்கு பெருகியதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் சமுதாய வாழ்வும் உயர்ந்தது.

அன்றே சொன்ன அறிவியல் உண்மை

 இன்று விண்வெளிப் பயணங்கள் வெகுவாக முன்னே றியுள்ளன. நிலவில் கால்பதித்து வெற்றியடைந்த மனிதன் அடுத்தடுத்துள்ள கோள்களிலும் தன் தடம் பதிக்க இடையறா முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறான். அவன் விண்ணில் ஏவிய வாயேஜர் போன்ற விண்கோள் ஆய்வுக்கலங்கள் வியக்கத்தக்க அரிய செய்திகளை கோள்களிலிருந்து திரட்டி வழங்கி வருகின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு விண்வெளி ஆய்வை அறிவியல் ஆய்வுலகம் முனைப்புடன் செய்து வருகிறது. இத்தகு விண்வெளி ஆய்வுக்கு அடித்தளமிட்ட பெருமை கான்ஸ்டான்டின் இட்டாலிச் மஸிலாக்வாஸ்கி (1857-1935) அறிவியல் ஆய்வ