பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



றிஞரையே சேரும். அவர் அன்று அனுமானித்து அறிவியல் புனைகதைகளில் விளக்கிக் கூறிய அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளின் செயல் வடிவமே இன்றைய விண்வெளி ஆய்வுத் தொழில்நுட்பவியல்.

அறிவியல் புனைகதைகளுக்கும் உருவாகியுள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குமிடையேயுள்ள அடிப்படை உண்மைகளைப் பற்றி,

“முதன்முதலில் புனைகதைகளாகவும் புராணங்களா கவும் இருந்தவை பின்னர் பல அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடித்து உலகம் உன்னத மகுடம் சூட ஏதுவாயின” எனக் கூறும் கருத்துகள் நாம் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவையாகும்.

அறிவியல் புனைகதைப் படைப்புகளைப் பற்றி ஆழச் சிந்திக்கும்போது அவை அறிவியலின் வெற்றிக்கு எவ்வாறெல்லாம் உதவக் கூடிய கற்பனை வளமிக்க கனவுகளாக அமைகின்றன என்பதை நம்மால் உய்த்துணர முடியும்.

பழகியவற்றின் அடிப்படையிலேயே அறிவியல் அனுமானம்.

அறிவியல் தொடர்பான எந்தவொரு செய்தியை விளக்கும்போது நாம் அவற்றை நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளின் அடிப்படையிலேயே அனுமானித்து விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறோம். இது ஒருவகையில் இயல்பான செயலும்கூட.

சாதாரணமாக விண்வெளி ஆய்வுக்கென நம் விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்களை உருவாக்கி வானில் பறக்க விடுகின்றனர். அவை பல சமயங்களில் குறிப்பிட்டவாறு. குறித்த திசையில் சென்று, குறிப்பிட்ட ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றன.