பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

87


சில சமயங்களில் எதிர்பாரா நிலையில் அவை குறிப்பிட்ட செல்பாதையிலிருந்து விலகிச் செல்வதுண்டு. 'செயற்கைக்கோள் செல்பாதையிலிருந்து விலகியது' என்ற செய்தியைப் படிக்கும் விஞ்ஞான அறிவுமிகுந்தோர் உண்மை நிலை என்ன என்பதை உணர்வர். ஆனால், அறிவியல் அறிவு குறைந்த சாதாரண மக்கள் இச்செய்தியைப் படிக்கும் போது தண்டவாளத்தில் செல்லும் தொடர் வண்டி தண்டவாளத்திலிருந்து விலகிச் செல்வதைப் போல் செயற்கைக்கோள் தன் பாதையிலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்ற அளவிலேதான் அனுமானித்துக் கொள்கிறார். தவிர்க்க முடியாத இச்செயலுக்குக் காரணம் நமக்குப் பழக்கமாகிப் போன, மிகவும் அன்னியோன்னியமானவற்றை வைத்து தான் எதையும் கருத்திற் கொள்ளவோ ஏற்கவோ செய்கிறோம். ஆனால், அறிவியலைப் பொறுத்தவரை இஃது ஏற்புடையதன்று. நமக்கு மிகவும் பழக்கமாகிவிட்ட தொடர் வண்டித் தண்டவாளப் பாதையைப் போன்றே விண்ணில் செல்லும் செயற்கைக்கோள் பாதையைக் கருத்திற் கொள்வது செயற்கைக்கோள் பாதையைப் பற்றிய தவறான கண்ணோட்டம் ஏற்பட எல்லா வகையிலும் இடமளித்துவிடுகிறது.

எனவே, செயற்கைக்கோள் செல்லும் விண்வெளிப் பாதைபற்றிய உண்மையான தகவல்களை - விஞ்ஞான விதிகளைப் தெளிவாக விளக்குவதன் மூலமே இதைப் பற்றிய தவறான எண்ணம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அவ்வாறு கூறும் அறிவியல் தகவல்கள் வெறும் கட்டுரை போன்று அமைந்துவிட்டால் அஃது படிப்போரின் கவனத்தை ஈர்க்கவோ ஆர்வத் தூண்டலை உண்டாக்கவோ இய லாமற் போய்விடும். எனவே, படிப்போரை தன்பால் கவர்ந் திழுக்கும் வண்ணம் அவ்வறிவியல் செய்திகளை கவர்ச்சியாகச் சொல்வதற்கான உத்திகளை வகுத்துச் சொல்வதன் மூலமே வாசகர்களைப் பெருமளவு ஈர்க்க முடியும்.