பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



அறிவியல் வளர்ச்சியின் அடித்தளம் அறிவியல் கற்பனைகளே

நாம் பெற வேண்டிய ஒன்றைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறோம். அந்தச் சிந்தனை கற்பனைக் காட்சிகளாக மனக்கண்முன் விரிந்து தோற்றமளிக்கின்றன. அந்தக் கற்பனை வளமிக்கப் புனைவுக் காட்சிகளை ஒவியமாகவோ சிற்பமாகவோ அன்றி எழுத்துருக் காட்சிகளாகவோ வடிக்கிறோம். வெகு காலத்திற்குப்பின் அவற்றைக் கண்ணுறும் அறிவியல் கண்ணோட்டமுடைய ஒருவர் அவைபற்றி தன் கோணத்தில் ஆராய முற்படுகிறார். அவற்றின்மீது பாயும் அவரது அறிவியல் நோக்கு புதியதோர் பரிமாணத்தை வழங்குகிறது. அதற்குத் தொழில்நுட்ப அறிவோடுகூடிய புத்துருவாக்கத்தை அளிக்க அஃது புதியதோர் அறிவியல் கண்டுபிடிப் பாக மலர்ந்து மணம் வீசத் தொடங்கிவிடுகிறது.

கற்கால மனிதன் தான் வசித்த குகைகளில் வரைந்த குகை ஓவியங்கள் ஒருவகையில் அவனது அறிவியல் படைப்பாக அவன் மேற்கொண்ட ஒருவகை நாகரிகக் கனவு என்றே கூற வேண்டும். விலங்குகளை வேட்டையாட அவன் மேற்கொண்ட முயற்சிகளும் கையாண்ட வேட்டைக் கருவிகளும் வலைவிரித்து கண்ணி வைத்துப் பிடிப்பதற்கான கருவிகளும், தான் கொண்டிருந்த அறிவியல் போக்கிலான கற்பனை உணர்வுகட்கு அவன் தந்த செயல் வடிவான தொழில்நுட்பத் திறன் என்றே கூற வேண்டும்.

இன்னும் சுருங்கச் சொன்னால் இன்றைய விஞ்ஞானிகள் மேற்கொண்டு வகுக்கும் ஒவ்வொரு அறிவியல் திட்டத்தையும் ஒருவித அறிவியல் படைப்பு வடிவமே எனக் கொள்ளினும் பொருந்தும்.

லியோனார்டோ டாவின்சியைப்பற்றி முன்னரே பார்த்தோம். அவர் அறிவியல் கண்ணோட்டமுடைய