பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

வியல் கதையின் முக்கிய அம்சமாகக் கொண்டு தங்கள் படைப்புகளை உருவாக்கினர். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை அறிவது போல்'லேசர் ஒளிக் கதிர்'பற்றிய ஆய்வு அமைந்து. கதைகளில் விவரிக்கப்பட்டதை விடப் பயனுள்ளதாக 'லேசர்' ஒளிக்கற்றை கண்டறியப் பட்டது.

நேற்றைய கற்பனை இன்றைய உண்மை

அறிவுபூர்வமாக அமையும் கற்பனைப் படைப்பு உண்மையில் நிழலாக அமைய முடியும் என்பதைக் கடந்தகால அறிவியல் புனைகதைப் படைப்புகள் பல எண்பித்துள்ளது.

அறிவியல் புனைகதைகள் வளர்ந்துவரும் அறிவியலின் புதிய எல்லைகளைத் தொட்டுக் காட்டும் வல்லமை கொண்டவை என்பதைப் பல அறிவியல் புனைகதை எழுத்தாளர்களின் படைப்புகள் புலப்படுத்தியுள்ளன.

அது மட்டுமல்ல, இப்படைப்புகள் பலவும், அடுத்து அறிவியல் எவற்றையெல்லாம் ஆராய வேண்டும் என்பதை சூசமாகக் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை என்பதற்குஎத்தனையோஅறிவியல் புனைகதைப் படைப்புகளைச் சான்றாகக் காட்டமுடியும்.

இதிலிருந்து பல உண்மைகள் நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.அதுதான்அறவியல் புனைகதைப் படைப்புகள்,வெறும் பொழுபோக்கு அம்சங்களைக் கொண்டவைகள் அல்ல; அவை வருங்காலத்தை உணர்த்தும் காலக்கண்ணாடிகள்;அடுத்தடுத்து நாம் ஆய்ந்தறியத்தக்க அறிவியல் மற்றும் தொழில் நுட்பச் சாதனைகளை அனுமானமாக ஊகித்துக் கூறி வழி நடத்தும் வழிகாட்டிகள்;இன்னும் சொல்லப் போனால் அறிவுப் பூர்வமாக ஆய்வு அடிப்ப