பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


டையில் உருவாக்கப்படும் அறிவியல் புனைகதைப் படைப் புகள், தீர்க்கதரிசனத் தன்மையை உயிர்மூச்சாகக் கொண்டுள் ளவைகளாகும்.

அறிவியல் புனைகதை எழுத்தாளர்களுள் மிகப் புகழ்பெற்ற எழுத்தாளராக, படைப்பிலக்கிய ஆசிரியராகக் கருதப்படுபவர் ஐவான் எஃப்ரிமோவ் என்பவர். இவர் அன்றைய சோவியத் நாட்டின் சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தவரும்கூட. இவரது அறிவியல் புனைகதைப் படைப்புகள் பலவும் உலக மொழிகளில் பெயர்க்கப்படும் சிறப்புப் பெற்றவை. இவர், தான் எழுதிய'கடந்த கால நிழல்' (1945) என்ற அறிவியல் சிறுகதையொன்றில் பழங்காலப் பாறைகளுக்கு ஒரு தனிவகை முறையில் ஒளியைப்பாய்ச்சினால் அவற்றில் எவ்வாறு உயிரோட்ட முள்ள மாபெரும் விலங்கான டினோசாரின் முப்பரிமாணஉருவம் தோன்றும் என்பதை விளக்கி யிருந்தார்.புனைகதையில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தி வாசகர்களிடையே மட்டுமல்லாது அறிவியல் ஆய்வாளர்களடை யேயும் ஒருவகைப் பரப்பரப்பை ஏற்படுத்தியது. சோவியத் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த யூரி டெனிஸ்யூக் என்ற இளம் விஞ்ஞானி இக்கருத்தைப்பற்றி நீளள நினைத்தார். முனைப்புடன் இததொடர்பாக ஆராயமுற்பட்டார். இறுதியில் ஐவான் இஃப்ரிமோவ் கூறியுள்ள அனுமானம்அறிவியல் அடிப்படையில் உண்மை என்பதைக் கண்டறிந்தார். ஒளி வட்டவியல் ஆராய்ச்சியில் அஃது ஒரு புதிய கண்டுபிடிப்பாக முகிழ்த்தது.

யூல் வெர்னேஎன்பவர் விஞ்ஞான மனப்பான்மை மிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர். இவர் கதையம் சத்தோடு அறிவியல் உண்மைகளை நுணுக்கமாக ஆய்ந்து விளக்குவதில் வல்லவர். அறிவியல் போக்கில் இவர் அனுமானித்துக்கூறும் பல விஞ்ஞானப் படைப்புகள் பின்னர்