பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

உண்மையான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாகவேஅமைந்தன என்பது இவரது ஆக்கபூர்வமான அறிவியல் அனுமான ஊகங்கள், எவ்வளவு வலுவானவை என்பதை உணர்த்துகின்றன. இவரது 'நாட்டிலஸ்' எனும் அறிவியல் கதையில் வரும் பல்வேறு ஊகச் செய்திகள் பிற்காலத்தில் அறிவியல் உண்மைகளாகவே உருமாறி அமைந்தன என்பது வெள்ளிடை மலை.

புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஹெச்.ஜி.வெல்ஸ். தமது அறிவியல் புதினமான “உலகங் களின் போர்"(war of the worlds) என்ற படைப்பில் ஒரு வகை லேசர்கற்றைகளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று அலெக்ஸி டால்ஸ்டாய் எனும் அறிவியல் படைப்பிலக்கிய ஆசிரியர்-பொறியியல்வல்லுநர் 'கார்னின் நிமிர்மாலை வட்டம்" (Hyperboloid of the Engineer Gann) என்ற அறிவியல் புதினப் படைப்பிலும் இதே போன்று லேசர் கற்றை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர்கள் படைப்பிலக்கியம் உருவாக்கிய காலகட்டத்தில் லேசர் கற்றைபற்றிய ஆய்வுகள் எதுவும் முனைப்புடன் மேற் கொள்ளப்படவில்லை. ஆயினும் இவ்விருவரின் அனுமானங்கள் காலப்போக்கில் ஆய்வுபூர்வமாக விஞ்ஞானிகளால் லேசர் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இவர்கள் யூகம் பெரும்பாலும் சரியாகவே இருந்தன என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.

இன்று மனித உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி யமைக்கும்முறைமருத்துவஉலகில் வெகுவாகவளர்ந்துள்ளது.உடலில் எந்த உறுப்பு பழுதானாலும் அல்லது செயலிழந்து போயினும் அவற்றைக் களைந்து விட்டு, அவ்விடத்தில்புதிய உறுப்புகளைப் பொருத்திக் கொள்ள முடியும். அதற்கான உறுப்புகளை இறந்தவர்களின்