பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

மணவை முஸ்தபா 95

உடலிலிருந்து உடனடியாகப் பெற முடிகிறது. 'கிட்னி' போன்ற உறுப்பை உயிரோடு இருப்பவரிடமிருந்தும் பெற முடிகிறது.

 ஆனால், சுமார் எழுபது ஆண்டுகட்குமுன் இத்தகைய நிலையை - முன்னேற்றத்தைப் பற்றி யாரும் சிந்தித்துக் கூடப் பார்த்ததில்லை - ஏன் - எண்ணிக்கூடப் பார்க்க யாரும் முனைந்ததில்லை.
 எனினும், அறிவியல் படைப்பிலக்கிய ஆசிரியர்கள் தங்கள் கதைகளில் மாற்று உறுப்பு பொருத்துவது பற்றிக் கற்பனை செய்துள்ளார்கள் என்ற செய்தி நமக்கு வியப்பளிக்கவே செய்கிறது.
 சோவியத் நாட்டின் மிகப் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை ஆசிரியர் அலெக்ஸாண்டர் புயலியேவ் என்பவர். இவரது கதைகளில் இவர் எதிர்காலத்தில் அறிவியல் பூர்வமாக என்னவெல்லாம் நடக்கவியலும் என்பதை தன் நுண்மாண் நுழைபுலத்தால் அனுமானித்து, கற்பனையாகக் கதை வடிவில் கூறியுள்ளார்.
 1925இல் இவர் எழுதிய “பேராசிரியர் டோவலின் தலை"  (Professor Dowell's Head)என்ற புனிதத்தில் மனித உடலுறுப்புகளை தேவையான பிற மனிதர்க்கு அறுவை மருத்துவம் மூலம் பொருத்த முடியும் என்பதை அனுமானமாக விவரித்தார்.  இச்செய்தி அன்றைய வாசகர்களின் நெற்றியைச் சுழிக்கச் செய்தபோதிலும், இக்கருத்து அறிவியல் ஆய்வாளர்களிடையே விவாதப் பொருளாகவும் ஆய்வுப் பொருளாகவும் அமைந்தது. பல ஆண்டுகட்குப் பின்னர் செர்ஜீ எஸ்.பிரியூசோனியங்கோ என்ற சோவியத் விஞ்ஞானி ஒரு நாயின் தலையை இன்னொரு நாயின் உடலோடு வெற்றிகரமாகப் பொருத்தினார். இந்த வெற்றி அளித்த ஊக்கம் விஞ்ஞானிகளை உடல் உறுப்பு மாற்று