பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

யது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்களில் அமைந்த இலக்கியங்களைப் பற்றிய குறிப்புகளும் செய்திகளும் ஆங்காங்கே ஒரு சிலரால் குறிப்பிடப்பட்டு வந்துள்ள போதிலும், அவைகளைப் பற்றிய முழுத் தகவல்களைத் தெரிவிக்கவல்ல ஆதார நூல் (Source book) ஏதும் இல்லாதது பெருங் குறையாசப் பட்டது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய இஸ்லாமியச் சிற்றிலக்கியக் கருத்தரங்குக்கு நான் தலைமைவகித்த போது, 'தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய இலக்கிய வடிவங்களைப் பற்றி ஆய்வு அடிப்படையில் ஆதார நூல்கள் எழுதப்பட வேண்டும் என்றும் இக்குறையை நிறைவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் இன்றியமையாத் தேவை' எனவும் குறிப்பிட்டேன். அதே கூட்டத்தில் என் வேண்டுகோளுக்குப் பதில் அளிக்கும் வகையில் அந் நிறுவன இயக்குநர் டாக்டர் ச.வே.சு. அவர்கள் இஸ்லாமிய இலக்கியப் பணியில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வரும் நீங்களே ஏன் அந்தப் பணியை மேற்கொண்டு செம்மையாகச் செய்து முடிக்கக் கூடாது?’ என வினாவடிவில் வேண்டுகோள் விடுத்தார்.இவ்வேண்டு கோள் ஒரு வகையில் எனக்குப் புதுவேகத்தை ஊட்டவே செய்தது. அன்று முதல் என்னை இப்பணியில் ஈடுபடுத்த முனைந்தேன். கிடைத்த இலக்கிய வடிவத் தமிழ் நூல்களைப் படித்து குறிப்புகளைச் சேகரித்து ஆய்ந்துவந்தேன்.

இந்நிலையில் 11-6-85 அன்று வானொலியில் 'தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்’ என்ற தலைப்பில் ஒரு மணிநேரம் 'இலக்கியப் பேருரை' ஆற்றுமாறு நண்பர் திரு. சோமாஸ்கந்த மூர்த்தி அழைப்பு விடுத்தார். இவ்வுரையை செவியுற்ற முன்னாள் சட்டப்பேரவைச் செயலாளர் சட்டத் தமிழறிஞர் திரு. மா. சண்முக சுப்பிரமணியம் அவர்கள் ஓர் பாராட்டுக் கடிதத்தை வானொலிக்கு எழுதியிருந்தார். இதேபோல் பல அன்பர்கள் பாராட்டி வானொலிக்கு எழுதியிருந்தனர். பின்பு, திரு. மா சண்முக சுப்பிரமணியம் அவர்கள் என்னைச் சந்தித்து, தமிழுலகுக்-