பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98



ஆவினா வெளியோர் கேட்டு
நாட்டத்தின் படியே தந்து
தாவிலா றகுமத்தாலே தற்காக்கும்
பொருள் தாமே”

என அல்லாஹ்வின் அருளைப் போற்றிப் புகழ்கிறார்.

இஸ்லாமியர்கள் இறைவனின் இறுதித் துரதராக வந்துதித்த அண்ணலார் மறைவழி வகுத்தளித்த இறைவழி யாகிய தீன் வழியில் நாளும் ஒழுகி வாழ்பவர்கள். தங்களுக்கு ஏதேனும இன்னல்கள் ஏற்படின் பெருமானார் வழிவாழும் எங்களைக் காத்தருள எல்லாம் வல்ல அல்லாஹ்வை வழுத்தி வேண்டி மன்றாடும் போக்கில் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடி இறையின் காப்பை வேண்டுகிறார் புலவர் நாயகம் சேகனாப் புலவர்.

"வள்ளன் மகமூது எனும் நயினார்
வழியின் ஒழுகி உன்னுடைய
விள்ளும் மார்க்கம் தலையெடுத்து விளக்கும்
தீனோர் ஆகையினால்
தெள்ளும் அறிவே மெய்ப்பொருளே தெளிவே
எங்கள் கண் மணியே
எள்ளும் ஆபத்து அணுகாமல இன்பம்
புரிவாய் றகுமானே’’

என மனமுருகிப் பாடுகிறார்.

அல்லாஹ்வின் இறை நேசர்களின் மூலமாக இறைவனின் திருவருளை வேண்டுவதாக அமைத்துள்ள முனா ஜாத்துப் பாடல்கள் இறைவனின் கருணையைப் பக்தி பூர்வமாக வேண்டுவதாக அமைந்துள்ளன. அவ்வகையில் நாகூர் ஷாகுல் ஹமீது ஆண்டகையை முன்னிலைப்படுத்தி அல்லாஹ்விடம் இறைஞ்சும் சேகனாப் புலவர்.