பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

புகழ், பிள்ளைத் தமிழ் மற்றும் மாணிக்க மாலை முதலிய பகுதிகள் இடம் பெற்றிருந்தாலும், இந்நூலுள் முனாஜாத்துப் பாடல்களாகப் பல அமைந்துள்ளன. அவை முனாஜாத்துப் பக்கங்களாகவன்றி பதிகங்களாக அமைந்துள்ளதெனலாம். செய்யிது முகியத்தீன் கவிராயர் இயற்றிய இம் முனாஜாத்துப் பாடல்கள் சொற்களையும் பொருட் சுவையும் நிறைந்து கருத்துச் செறிவோடு விளங்குகின்றன.

இக்கவிராயர் அல்லாஹ்வினிடம் தன் குறைகளைக் கூறி அவற்றைப் பொறுத்துத் தன்னை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறார் இவர் குறிக்கும் குற்றங் குறைகள் சாதாரணமாக மக்களிடையே காணப்படுவனவாகும். ஆயினும் பொதுமக்கள் செய்த குற்றங்களையெலலாம் தானே செய்தது போல் பாவித்து, அவற்றை அல்லாஹ்விடம் முறையிட்டு கழுவாய் தேடுவதன் மூலம் மக்களுக்கு இறையருள் வேண்டுகிறார். அத்தகைய குற்றங்களைப் பட்டியல் போட்டுக் காட்டி வேண்டுகிறார்,

"மன வரம்பில்லா பாவியைப் புவிமாயை
                     மாதரைத் தொடருமிந்த
வஞ்சகனை அஞ்சொ குத்தும் தொழாத்
   தோஷியை மறப்பினாலிடு மூடனை
இன வரம்பில்லா மெய்ஞ்ஞான போதம
                   எள்ளளவு இலா முரடனை
எந்நேரமும் கொடிய ஆணவத்தாலேயே
                   இடும்பு செய்யு முழுவண்டனை
முண்டெனக் காணாதகட் குருடனைக்
         காசாசை யானிதமு மேதுசெய்
வேனென்ற கவலையில் அழுந்தழுகலை
    சேவைதேந்தாட் கொள்வ தெந்நாளோ
அல்ஹமது லில்லாஹி றப்பில்லால
                     மீனா தி ரஹுமானியே"

எனக் கூறுகிறார்.