பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107



முனாஜாத்து பாடல்கள் முகியத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் மீது பாடப்பட்டுள்ளன. உலக இறை ஞானச் செல்வர்களின் தலைவரான முகியத்தீன் ஆண்டகையிடம் தம் குறையிரந்து அருள் புரிய வேண்டும் பாடல்கள் பலப்பல உண்டு அவற்றுள் ஒன்று,

"எங்கே திரிந்தாலும்
எவ்வழில் சென்றாலும்
அங்கே உதவி செய்யும
அன்புடையார் தாங்களல்லோ
இங்கே அடிமைக்கிரங்கி
இரட்சித்து ஆண்டருளும்
செங்கமலப் பாதச்
செய்கு முகியத்தீனே’

என்பதாகும்.

மற்ற முஸ்லிம் புலவர்கள் இயற்றிய பாடல்களில் அல்லாஹ், இறைத்துTதர் அண்ணலார். இறைநேசச் செல்வர்கள் காதர் முகியத்தீன் ஜீலானி, இறையடியார்கள், பெருமானார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதெல்லாம் முனாஜாத்துப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. எந்தப் புலவரும் பாடாத இரு நபிமார்கள் மீது பாடப்பட்ட முனாஜாத்துப் பாடல்கள் சாகுல் அமீதுப் புலவர் பாடிய 'சற்கீத சிந்தாமணி' எனும் முனாஜாததுப் பாடல்களில் காணப்படுகின்றன. அந்நூலின் தொடக்கப் பாடலில் கிளிறு நபி (அலை) அவர்கள் பேரிலும் இல்யாசு நபி (அலை) அவர்கள் பேரிலும் முனாஜாத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இருவர் பெயரும் இணைந்தே இம் முனாஜாத்துப் பாடல்களில் இடம் பெற்றிருப்பது புதுமையாகும். ஒவ்வொரு பாடலிலும் இரண்டு நபிமார்களின் பெயரும் இணைந்த நிலையில் 'கிளறில்யாசு’’ எனக் குறிக்கப்படுகின்றனர். இப்பாடல்களில் காணும் மற்றொரு சிறப்பம்சம் ஒவ்வொரு பாடலின் முதற் சீரும்