பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

செய்து கொள்ளத் தயங்கவில்லை. இத்தகைய இலக்கண வழுக்கள் தமிழ் மொழியைப் பொருததமட்டில் சரியாக இருக்கலாமேயொழிய அரபி மொழி இலக்கணத்தைப் பொருத்தமட்டில் சரியானதாகவே அமைந்துள்ளது. சான்றாக, தமிழ் மொழியின் உயிர் மெய் எழுத்துக்களில் ங, ட , ல, ள, ழ, ர, ற, ண, ன என்ற எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வராது என்பது விதி. ஆனால், அரபு மொழியில் எல்லா எழுத்துக்களுமே மொழிக்கு முதலில் வரும். எனவே, அரபு மொழி அமைப்பைப் பின்பற்றி, புலவர் நாயகம் சேகனாப் புலவரும் வேறுசில புலவர்களும் தமிழ்ப் பாடல்களை, முனாஜாத்துகளாகப் பாடியளித்துள்ளனர். அரபு எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் முதலெழுத்தாகக் கொண்டு பாடப்பட்டுள்ள முனாஜாத்துப் பாக்களின் மூலம் இஸ்லாமிய தத்துவ ஞானம் சிறப்பாக விளக்கப்படுகிறது. சான்றாக, அரபு அரிச்சுவடியின் 23வது எழுத்து "லாம் என்பதாகும். தமிழில் 'ல’ எனும் உயிர் மெய்யெழுத்து மொழிக்கு முதலில் வராது ஆயினும் புலவர் நாயகம் அவர்கள் தம் முனாஜாத்துப் பாடல் ஒன்றின் முதலடியின் முதலெழுத்தாய் 'ல' கரத்தை அமைத்துப் பாடியுள்ளார்

"லவுலாக்க ஆல மெல்லா நான்படை
                      யேனென் றோதும்
அவுலா நீ ராகை யாலும் அறுவாகுக்
                        குயிர் நீ ராலே
கவுலான துள்ள நோக்கிக் கட்கடை
                         யென்பா னோக்கு
மவுலா அலா முறாதி முகம்மது
                          நபியுல்லாவே"

எனும் அப்பாடலில் 'ல' கரத்தை முதலெழுத்தாகக் கொண்டு லவுலாக்க' எனும் சொல்லுடன்தொடங்குகிறது.