பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110



அச்சொல்லுக்கேற்ப நான்கு அடிகளிலும் எதுகை அமைத் துள்ளது இவ்வெதுகைச் சொற்கள் நானகுமே அரபுச் சொற்களாக அமைந்துள்ளது கவனிக்கத்தக்கதாகும். இங்கு 'ஆலம்’ எனும அரபுச் சொல் பொருள் பொதிந்த தாக அமைந்துள்ளது. இறைவன் தன் திருமறையில் 'அண்ணலாரைப் படைததிராவிட்டால் உலகங்களையே படை த்திருக்க மாட்டேன்' என இறைவன் தன் திருமறை யில் குறித் திருப்பதற்கொப்ப, இங்கே ஆலம்’ எனும் அரபுச் சொல்லை எல்லா உலகங்களையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தியுள ர் இவ்வாறு அரபு எழுத்துக் களை சொற்களை அப்படியே பயன்படுத்தி மறைவழி இறையருளை வேண்டும் வகையில் பாடியுள்ளார்.

இதேபோன்று பதுறுத்தீன் புலவர் இயற்றிய முகியித் தீன் முனாஜாத்து நூலில் இடம்பெற்றுள்ள 35 பாடல் களில் முதல் 20 பாடல்களிய் அரபு அரிச்சுவடியிலுள்ள 29 எழுத்துக்களில் வரிசைக்கிரமமாக ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பாடலிலும் முதல் எழுத்தாக அமைந்துள்ளது. 21வது எழுத்தான காப்” இரண்டு பாடல்களில் முதல் எழுத்தாக இடம் பெற்றுள்ளது. இப்பாடல்களின் இறுதி யடியின் இறுதிச் சொல் பெரும்பாலும் "முகியித்தீன்' என்றே முடிகிறது.

பதுறுத்தீன் புவவரின் முகியித்தீன் முளாஜாத்துப் பாடல்களில் பாடலின் முதல் அடியின் முதலெமூதது அரபு எழுத்துக்களின் ஒலிபெயர்ப்பாக இடம் பெற்றிருப் பதுடள், ஒவ்வொரு அடியிலும் இரண்டு மூன்று அரபுச் சொற்கள் சராசரியாக இடம் பெற்றுள்ளன,

அலிபதின் அஸ்லாய் நின்ற அட்சரஞ
                       சுழிந்து வீசி
றலிபெனும் இஷ்கு மீறி அஹது
                       மீமஹா மதான