பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114



தமிழில் இதுவரை பதின்மூன்று படைப்போர் இலக் கியங்கள் முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்டுள்ளன. இவையனைத்தும் முஸ்லிம்கட்கும் முஸ்லிமல்லாதவர் கடகுமிடையே நடைபெற்ற போர்களாகும். இவை வழக்கமான மண்ணாசை பெண்ணாசை போன்றவை கட்காக நடைபெற்ற போர்கள் அல்ல. இவையனைத்தும் இறைநெறியை இஸ்லாமியக் கொள்கையை கோட்பாடுகளை நிலை நிறுத்தும் பொருட்டு நடைபெற்ற போர்களாகவே அமைந்துள்ளன என்பது எண்ணத் தக்கதாகும்.

இப்படைப்போர் இலக்கியங்களை ஆய்வாளர் இரு வகைகளாகப் பிரிப்பர்.காப்பியத்திற்குண்டான இலக்கண அமைப்போடு ஒரிரு சிறு மாற்றங்களுடன் அமைந்தவை களைப் படைப்போர் காப்பியங்கள் என்றும் காப்பிய அமைப்பு முறையினின்றும் சற்று வழுவி,காப்பியக் கட்டுக் கோப்பின்றி, ஓசை நயம், கள வர்ணனை போன்றவற்றில் அதிகக் கருத்துான்றி சாதாரண மக்களின் சிந்தையை வீர உணர்வால் நிறைக்கும் வண்ணம் எழுதப்படும் சிறுசிறு போர்களைப் பற்றிப்பாடும் படைப்போர் இலக்கியங்களை நாட்டுப்புற வீரக் கதை இலக்கியங்கள் என்றும் பாகுபடுத்திக் கூறுவர்.

படைப்போர் இலக்கியங்கள் தமிழில் எழுதுவதற்குத் தோன்றாத் துணையாக அமைந்த நூல் ‘கிதாபுல் மகாஸி' எனும் அரபி மொழி நூலாகும். பெருமானார் காலத்தில் நடைபெற்ற பல்வேறு போர்களைப் பற்றிய செய்திகளையெல்லாம் தொகுத்தளிக்கும் நூலாகும் இஃது. இதன் ஆசிரியர் முகம்மது இப்னுல் உமறுல் வாகிதி என்பவராவார்.

படைப்போர் இலக்கியங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் மதுரையைச் சேர்ந்த வரிசை முகியித்தின் புலவரால் இயற்றப்படட 'சக்கூன்