பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

படைப்போர்' ஆகும். இன்றைக்குச் சரியாக முன்னுாறு ஆண்டுகட்கு முன்பாக 1686-ம் நுண்டில் இந்நூல் இயற்றப்பட்டதாகக் குறிக்கப்படுகிறது. இந்நூலே 'படைப்போர் இலக்கிய வகையை முதன்முதலாகத் தொடங்கி வைத்ததோடு இவ்வகை இலக்கியங்கள் பலப்பலவாக உருவாக வழிகாட்டியாகவும் அமைந்தது எனலாம்.

சக்கூன் படைப்போர்., சக்கூன் எனும் முஸ்லிமல்லாத ஈராக் நாட்டு மன்னனுக்கும் பெருமானார் (சல்) அவர்களுக்கும் இடையே நடந்த போரை விரித்துரைப்பதாகும். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாது அதற்கு மாறுபட்டு நின்ற ஈராக் மன்னனான சக்கூன், இறைதூதராம் பெருமானாரோடு பொருத முனைந்து போருக்கெழுந்தான். ஆற்றலோடு பெரும்படை கொண்டு போர் செய்தும் இறுதியில் பெருமானாரிடம் தோல்வி கண்ட சக்கூன் மன்னனும் அவன கூட்டத்தாரும் இஸ்லாத்தை ஏற்றனர். முஸ்லிமாகிவிட்ட சக்கூன் மன்னனுக்கே வெற்றிகொண்ட இராக் நாட்டைப் பெருமானார் மீண்டும் ஒப்படைத்து தீனோங்க உழைக்கச் செய்தார். இரான் நாட்டில் தீன்பயிர் செழித்துவளர சக்கூன் மன்னன் முனைந்து பாடுபட்டான் என முடிகிறது . சக்கூன் படைப்போர்’ இதனை வருகை முகியித்தீன் புலவர்.

'மற்றுமர சர்சள் வந்து திறையளக்க
குற்றமொன்றில்லாத கோனாம் சக்கூனரசும்
கெங்கோல் செலுத்திந் தேசமெல்லாம்
                                   தீன் விளங்க
மங்கா திருமறையால் வாழ்ந்திருந்தாரம்மானை ’

எனக், கூறி விளங்க வைக்கிறார்.

இந்நூலாசிரியர் எளிய உவமைகளின் மூலம் ஆழிய உணர்வுகளை உருவாக்குவதில் தனித்திறமைபெற்றவராகத்