பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

முஸ்லிம் அல்லாதவர்களின் பெயராலேயே அமைந்துள்ளன. இதற்குச் சரியான காரணம் இருக்கின்றது. அமைதியைப் போற்றும் சாந்தி மார்க்கமான இஸ்லாத்தில் ஆக்கிரமிப்புக்கு இடமே இல்லை. ஒரு முஸ்லிம் முதலில் யார் மீதும் போர் தொடங்கவோ அன்றி எதிரியின் நிலத்தையோ பொருளையோ ஆக்கிரமிப்புச் செய்யவோ அனுமதி இல்லை. அதேசமயம் பிறர் படையெடுத்து வரும்போதோ ஆக்கிரமிப்புச் செய்யும் போதோ தற்காப்புக்காகப் போரிடுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. எனவே தான், முஸ்லிம்களின் மீது ஆக்கிரமிப்பாகப் படை யெடுத்து வந்த முஸ்லிமல்லாத எதிரிகளின் பெயராலேயே 'இரவுசுல்கூல் படைப்போர்", 'செய்யிதத்துப் படைப் போர்’, இபுனியஅ படைப்போர்', 'வடோச்சிப் படைப் போர்', 'உச்சிப் படைப்போர்’ என அழைக்கப்படுகின்றன .

ஆசிரியர் குஞ்சுமூசு ஆலிம் லெப்பை அவர்கள் இஸ்லாமிய ஞானம் மிக்கவராதலின் திருமறையின் தொடக்க வசனத்தின் தமிழ்ப் பிழிவாகத் தன் நூலின் காப்புச் செய்யுளை அமைத்துப் பாடியுள்ளார்.

'எல்லாத்துதி யும்புகழ் எவ்வகையும்
நல்லாலம் அனைத்துடன் நடத்தியருள்
அல்லாவொரு வற்கவை யாகும்எனும்
சொல்லானது கொண்டு தொடங்குமால்'

என்பது அப்பாடல்.

சாதாரணமாக இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களில் காப்புச் செய்யுட்களாக நான்கைந்து பாடல்கள் இடம் பெறுவதுதான் வழக்கம். ஆனால், குஞ்சுமூசுப் புலவர் அவர்கள் தம் இரவுசுல்கூல் படைப்போர் காப்பியத்துள் பதினொரு பாடல்களைக்காப்புச் செய்யுளாகப்பாடியிருப்பது அவருக்கு இறைவன் மீதுள்ள பக்தியுணர்வையும் பெரு-