பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

காலினிக் ஜங் கதியைல் காட்டி கருத்தினில்
திடத்தைக் காட்டி
மேலினால் வியர்ப்புக்காட்டி விழியினில்
எரியைக் காட்டி
தாதுவின் தலையைக காட்டி தரைவிடும்
துகளைக் காட்டி
வாலினில் விசையைக் காட்டி வயப்பரி
நடந்ததம்மா!

என வியப்புணர்வோடு ஓசைநயம் பொங்கக் கூறி இன்புறுத்துகிறார்.

போரைப்பற்றிய செய்தியேயாயினும் இஸ்லாமிய நெறிகளை, தீனின் மேன்மையை எடுத்துக்கூறத் தவறவில்லை. இரவு சுல்கூல் படைப்போரில் மதீன நகர்ப் படலத்தில் உள்ள ஒரு பாடல் திருக்குர்ஆனை ஒளியூட்டும் விளக்காகவும் கலிமாவை நெய்யாகவும் தீன் நெறியைத் திரியாகவும் உருவகித்துப் பாடியிருப்பது வெகு அருமையாகும். அபபாடலில்,

"வெறறியி சூல்மறை விளக்கினை நிறுத்தி
உற்றகலி மாநெயை உவப்பொடு நிரப்பிக்
குற்றமறு தீன் திரி குயிற்றியிசு லாந்தீப்
பற்றுவர்கள் எங்குமுயர் பாவையிள மின்னார்"

எனக் கூறுகிறார் குஞ்சுமூசுப் புலவர் அவர்கள்.

படைப்போர் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு நூல் 'ஐந்து படைப்போர்' ஆகும். அசன் அலிப் புலவரால் பாடப்பட்ட இவ்விலக்கியத்தில் ஐந்து படைப் போர்கள் அடங்கியுள்ளன. இஸ்லாமியப் படைகட்குத் தலைமை தாங்கிய அலி (ரலி) அவர்களை எதிர்த்து வந்த இஸ்லாமிய விரோதிகளான ஐந்து அரசர்களை எதிர்த்துப்