பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

“இம்மா நிலமதனின் எல்வவரும் கேட்பதற்குப்
பெம்மா னினல்லா பெரிய வருளாளே
அமமானை பாட ஆனவுரைதான் கொடுத்தார்
இம்மை மறுமைக் கிலங்கும் புகழாளர்
அஞ்சு படைப்போராக அருமையுடன் பாடுதற்கு
வஞ்சகமில்லா வரிசைபெறும ஆரை நகரர்
ஆதியருள் பெற்ற அஹ்மதென்போர் நற்சுதன்மா
நீதி றாவுத்த நிதிகோடி தானிந்தான்
அம்மானைசேர்க்க அரியகொடை தந்ததனால்
மெம்மா னவற்குப் பெரும்பதவி செய்திடுவான்”

 எனக் குறிப்பிட்டுப் பேற்றும் ஆசிரியன் நன்றி மறவாத்தன்மை கண்டு உவக்கிறோம்

"ஐந்து படைப்போர்" நூலின் அமைப்பு முறையை நோக்கும்போது ஒரே இலக்கியம்போல் தோற்றமளிப்பினும் அவற்றுள் தனித்தனியே அமைந்த காப்புச் செய்யுட்களும் தனித்தனியான கதைகளும் இதனை படைப் போர்களைப்பற்றிய தொகுப்பு நூலாகவே காட்டுகிறது. காப்புச் செய்யுட்களாக அமைந்து ஐந்து வெண்பாக்களைத் தவிர்த்து, இந்நூல் இரண்டாயிரத்து எழுநூற்றி ஐம்பத்திரண்டு அம்மானைக் கண்ணிகளைக் கொண்டுள்ளது. ஈரடிகளில் அமைந்த அம்மானைக் கண்ணிப் பாடல்கள் ஓசையினின்மை மிக்க ஆங்கில படைப்போர் செய்யுள் வடிவான ஈரடி வீரப் பாடல்களையே நினைவூட்டுகின்றன. எளிய நடையில் இனிய அம்மானைக் கண்ணிப் பாடல்களாலான இந்நூல் நாட்டுப்புற இலக்கியமாகவும் கருதத்தக்க அளவில் அமைந்துள்ளது எனலாம்.

இறைவனின் காப்பைத் தேடி அவனருளை வேண்டி நூலைத் தொடங்கும் ஆசிரியர், நூலின் தொடக்கத்திலேயே கதையைப் படிப்போரும், சொல்லக் கேட்போரும் இறையருள் பெற்றோராய்ச் சிறப்புடன் வாழ.