பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126



அனுப்புகிறார். லந்த தூதை இழித்தும் பழித்தும் பேசியதோடு, மதீனமா நகரத்தையும் முஸ்லிம்களையும் ஒழிப்பேன் எனக்கூறி, மூர்க்கமாகப் போரிடத் தொடங்குகிறான். அதனை முழு மூச்சோடு எதிர்த்து அலியார் தலைமையில் மூஸ்லிம்கள் போரிட்டு வெற்றி நடை போடுகின்றனர். தோல்வியைத் தழுவத் தொடங்கிய இபுனியன் படைகள் அழியத் தொடங்குகின்றன. முற்றிலும் அவர்கள் அழிந்து படா வண்ணம் காக்க இறுதி வாய்ப்பாக அலியார் மீண்டும் இபுனியன் நல்வழிப்பட்டுத் திருந்தி வாழ அமைதித துாது அனுப்புகிறார். இந்த அரிய இறுதி வாய்ப்பையும் ஏறகாத இபுனியன் மூர்க்கத் தோடு முஸ்லிப்களைத் தாக்க முற்பட்டு மரணத்தைத தழுவுகிறான். தன் கணவன இபுனியன போர்க்களத்தில் வெட்டுண்டு வீழ்ந்த செய்தியறிந்த அவன் மனைவி அலியாரிடம் தன் மகளோடு சென்று அழுது புலம்பித் தன ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். அலியார் அவளுக்கு நல்லுரை கூறி. நல்வழிப்பட்டு வாழுமாறு கூறி. இபுனியன ஆட்சிக்குட்பட்ட அரசை அவன் மனைவிக்கே வழங்கி நேர் வழிப்பட்ட ஆட்சி புரியுமாறு பணிக்கிறார். அவளும் அவள் மகனும் அவள் ஆட்சிக்குட்பட்டோரும் தீன் நெறி தழுவி நல்லாட்சி புரிய முனைகிறாள். இது வரை நடந்தவறறை விவரித்து அண்டை நாட்டரசன் இந்திராயன் என்பானுக்குத் துாதனுப்புகிறாள் இத்தோடு இபுனியன் படைப்போர் பற்றிய முதல் கதை முடிவடைகின்றது



முதல் படைப்போரின் கதாநாயகன் இபுனியனின் தோற்ற வர்ணனை, அவனை அரக்கத்தன முள்ள மன்னன என்பதை சொல்லோவியமாகக் காட்டிவிடுகின்றது. அதோடு மூர்க்கத்தனமாகப் போர்க்களத்தில இரு படை களும் பொருதுகின்றன. அப்போது எழுந்த தூசிப்படலம் கதிரவனை மறைத்து வானத்தையே மூடிவிடுகின்றது, ஒரு படையினர் மற்ற படையினர்க்கு என்ன நேர்ந்தது என்று அறிய இயலாமற்போய் விட்ட தவிப்பை,