பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127



'இருவர் படைக்காற்று சால் எழும் பொழுதை
                                                           காணாதங்
கொருவர் படையெ- வருற்றுணர்ந்துதானறியார்’

என ஆசிரியர் அசன் அலிப் புலவர் கூறுவதன் மூலம் போரின் உக்கிரத்தை நமக்கு உணர்த்தி விடுகின்றனர்.

அண்டை நாடான முலுத்தானை இந்திராயன் என்பான் ஆண்டு வந்தான். மூர்க்கத்தன மிகுந்த மன்னனான அவனுக்கு இரு பெண்மக்கள் இருந்தனர் மூத்தவளை தாகி என்பவனுக்கு மண முடித்துக் கொடுத்திருந்தான். இளையவள் பனிமதி எனும் பெயரினள். பெண்ணலம் அனைத் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அழகுமிகு நங்கை நல்லாள். அவளுக்குகந்த மணாளனைத் தெர்ந்தேடுக்க சுயம்வர ஏற்பாடு செய்திருந்தான் இந்திராயன். குணநல மிக்க பனிமதியை மணமுடிக்க மன்னர் பலர் இந்திராயன் அவைக்கள மண்டபத்தே குழுமியிருந்தபோது இபுனியன் மனையாள் அனுப்பிய துாதுவன் வந்து சேர்ந்தான்.

இபுனியன் மறைந்த விவரங்களை அறிந்த மன்னன் இந்திராயன் சினமிகக் கொண்டான். இபுனியனின் அழிவுக்குக் காரணமானவர்களை அழித்தொழிக்கப் போவதாக ஆர்ப்பரித்தான். இறைத்துாதையும் இறை மொழியையும இழிமொழிகளால் பழித்து வஞ்சினம் கொண்டான். சுயம்வர மண்டபத்தில் குழுமியிருந்த சுயம்வர மண்டபத்தில் குழுமியிருந்தோரிடையே,

'அலிதனைக் கொண்டு வந்தோர் அக்கணமே
யென் மகளை
தாலிகட்டி வாழ்ந்திடலாம் தாராதபேர்களெல்லாம்
பீடிகட்டி சேலைகட்டி பேசும்புறவூர்க் கேகி
கூலி நெல்லு குத்திக் கொண்டுகுறைதீர்க்கலாமினி'

எனக் கூவி ஆர்ப்பரித்தான் இந்திராயன்.