பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

இதனைச் செவி மடித்த உச்சி என்பான் அலியின் தலையைக் கொய்து வருவேன் எனச் சூளுரைத்து விரைந்தான். மற்றைய மன்னா்களும் அவ்வாறே ஆராவாரித்து அவனைத் தொடர்ந்து அணி வகுத்துச் சென்றனர்.

மதினா நோக்கிப் பெரும்படை வருவதையறிந்த பெருமானார் . அப்படையினை எதிர்த்துப் போரிடத் தானைத் தலைவராகச் செல்லத் துணிந்தார். இதையறிந்த அவர் தம் தோழர்கள் அபூபக்கரும உமரும் உதுமானும் தாங்கள் சென்று வென்று வர அனுமதி வேண்டினர். டுரர்புலி அலியாரோ தன் தலை கொய்யத் திரண்டு வரும் கொடியவர்களை வெற்றி கொள்ளத்தான் செல்வதே பொருந்துமெனக்கூறி அண்ணலாரிடம் அனுமதி வேண்டினார். பெருமானார் அலியாருக்கே அனுமதி அளித்தார்

அலியார் தலைமையில் சென்ற முஸ்லிம்களின் பெரும் படையை உச்சியின் படைகள் சுற்றி வளைத்துத் தாக்க முயல்வதை,

'சிங்கத்தை ஆட் டினங்கள் சேர வளைத்தன போல்
பக்கத்தில் சூழ்ந்தார் கள பயகாம்பர் சேனைகளை
காற்று மழையுங் கனமுயலு மொன்றாய்
கற்று குணம் பாய்ந்ததுபோல் நின்று பொருதனரே?
எனப் போர்க்களக் காட்சியையே படம் பிடித்துக்காட்டி

விடுகிறார் ஆசிரியர்.

கடுமையாக எதிர்த்துப் போரிடும் பகைவனான உச்சி மீது அலியார் அவர்கள் பரிவு காட்ட விழைகிறார். தான் மேற்கொண்டுள்ள தவற்றிலிருந்து தப்பிப் பிழைக்க இறுதியாக அன்பழைப்பு விடுகிறார், ஆயினும் அவரது உயர்ந்த நோக்கத்தை உணர்ந்து தெளியும் ஆற்றலில்லாத