பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

உச்சி அலியரின் வாளுக்கு 'இறையாகி வெட்டுண்டு மடிகிறான். தலைவன் வீழ்ந்து பட்டதையறிந்து அவன் படையினர் சிதறியோடினர் இதனைக் கூறவந்த ஆசிரியா்,

"ஊரோடு நாமும் ஒக்க ஒடுவோமென்றிடுவார்,
பாரோடு நாமும் பரதேசம் போவோமென்பார்'

எனக் கூறி பயத்தோடும் உச்சிப் படையினரையே நம் மனக்கண் முன் கொணடு வந்து காட்டி விடுகின்றாா் . இவ்வாறு இரண்டாவது படைப்போர்முடிவடைகின்றது,

மூன்றாவது படைப்போர் வடோச்சிப் படைப்போராகும். உச்சி தோற்று மடிநததால் மன உளைச்ச லுற்ற இந்திராயன் துவண்டிருந்த நேரத்தில் வட்ட மண்டல மன்னன் வடோச்சி என்பான் இந்திராயனைக் காண வருகிறான். பனிமதியின் பேரழகில் மனதைப் பறி கொடுத்து, அவளை மணமுடிக்க அவாவிநின்ற வடோச்சி இந்திராயனின் எண்ணத்தை நிறைவேற்ற முனைந்து நின்றான். இபுனியனையும் உச்சியையும் கொன்று குவித்த அலியாரின் தலையைக் கொய்து வருவதாகச் சூலுரைத்தான். அவ்வாறு கொய்து திரும்பினால் தன் மகள் பனிமதியை மணமுடித்துத் தருவதாக வாக்களித்தான் இந்திராயன்.

இந்நிலையில் உப்பரிகை மாடத்தில் உலாவி நின்ற பனிமதியின் அழகுமிகு தோற்றம் அவன் உள்ளத்தில் ஆசை வெறியாக அலை மோதுகின்றது. அவள் அழகுருவை எண்ணி எண்ணி வியக்கிறான். இதனை,

""கிஞ்சுகம் போல் மொழியும் கீற்றுப்பிறை போல்
 நுதலும்
மஞ்சு தவழ் குழலும் மாமதியைப்போல் முகமும்
முருக்கம்பூ போலிதழும் மோகமுற்ற பல்லழகும் கருக்கெழுதும் கண்ணழகும் கழறுகின்ற கைவீச்சும்