பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வாளைத்தண்டு போலே வடிந்த தடிக்காதும்
கொள்ளை கொள்ளும் ஆட வரைக் கொந்தளக
பாரமதும்

பச்சை முகமதுபோல் பாசக் கழுத்தழகும்
இச்சை பூந்தேன் வார்த்த தேய்நவேய் பொற்றோளும்
அரம்பை போலே துடையும் அகமெலாம் பூஷணமாய்
இன்னமவள் பேரகங் கெவ்விடத்துமில்லையென’’

எனக் கூறுகிறார் ஆசிரியர் அசன் அலிப் புவவர்

பனிமதிபோன்றே வடோச்சியும் அழகும் வீரமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவன் அழகில் சீவகனையும் ஆற்றலில் வீமனையும் வில்திறனில் அர்ச்சுனனையும் தேரோட்டத்தில் நலனையும்கொடைத்திறத்தில்கர்ணனை யும் விஞ்சும் தகைமை மிக்கவன். இத்தகைய வடோச்சியிடத்து பனிமதியும அன்பு கொண்டிருந்தது வியப்பன்று. தன் தலைவன் பனிமதி மீது கொண்டுள்ள காதலுணர்வை புலப்படுத்திய பாங்கனிடம் பனிமதி ஆயுதமேந்திப் போரிடாது அமைதி வழியில் நபிகளார் நல்வழியில் வடோச்சி வாழக் கருதின் அவனோடு வாழ்தல் எளிது மடடுமல்ல இனிதுமாகும் எனப் புலப்படுத்துகிறாள். எனினும், தன் வாள் மீது கொண்ட நம்பிக்கையால் பெரும் படைகொண்டு அலியாரை எதிர்க்கத் துணிந்துபுறப்படுகிறான்.

முஸ்லிம்கள் மீது போரிட மதீனா நோக்கிப் படை யெடுத்து வந்த வடோச்சி தீதின்றி உய்ய நபிகள் நாயகம் தூதனுப்பி மறைவழி காட்டும் இறைவழி நடக்குமாறு பணிக்கிறார். அவர் தூதுரைக்குச் செவிமடுக்கா மன்னன் வடோச்சி பெரும்படையுடன் அலியார் முன் ஏகுகிறான். அவன் அழிவதைவிட வாழ்வதே நலம் என அலியார் இந் நிலையிலேனும் தீயவழி விடுத்து நல்வழிப்பட அறிவுறுத்துகிறார். அதற்கிணங்கா மன்னன் வடோச்சி, ஆயுதமின்றி இருக்கும் அலியாரின் தலைகொய்ய முயலுகிறான். அலி-