பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

பனிமதியை மணமுடிப்பது எனத் திட்டமிட்டு அதனை அலியாரிடம் கூற அதனை ஏற்காத அலியார் பெண்ணாசையால் வடோச்சி கொண்டுள்ள தவறான வழி முறையை விடுத்து நேர்வழியில் தாகியை அணுகி இஸ் லாத்தை ஏற்கச் செய்வோம் எனக் கூறுவதுடன் மூன்றாவது படைப்போரான வடோச்சிப் படைப்போர் முற்றுப் பெறுகிறது.

இஸ்லாத்தை ஏற்ற வடோச்சியும் அவன படையினரும் தனிநகரை ஆண்டுவரும் தாகியின் கோட்டையை முற்றுகை யிடுகின்றனர். தாகி தீன் வழி ஒழுகி வாழ்வில் ஏற்றம் பெறுமாறு அறிவுரை வழங்க துாதொன்று அனுப்பப்படுகிறது அத்துாதுவரோ நல்வழிப்படத்தக்க அறிவுரைகள் பல கூறியும் பயனின்றிப் போய்விடுகிறது. துாதை நிராகரித்ததுடன் கடுஞ்சினம் கூறி போருக்கெழுந்தான். இரு சாராருக்குமிடையே கடுமையான போர் நிகழ்ந்தது. போரில் ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை நூலாசிரியர் அசன் அலிப் புலவர்,

'ஆயுதங்களெல்லாம் அழியப் பொருதனரே
வாய்மதங்கள் பேசி வலியகணை கொண்டெறிவார்
ஆதித்தனும் மறைந்தான் அம்பு மழையாருடனே

எனக் கூறி விளக்குகிறார்.

போரின்போதே தாகி தகாதவழி விடுத்து நேர்வழி பேணி நடக்க அறிவுரை கூறப்பட்டது.

"வழிக்குப் பொதிசோறு வண்மையுள்ள ஈமான் காண்
வழிக்கு வந்து நில்லாதே பாழ்படும் உன்தேச
மெல்லாம்'
அறிவுரையோடு அச்சமூட்டிஎச்சரிக்கைசெய்யப்பட்டான்

குறிப்பிட்ட இடத்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு செல்லும் பயணிக்கு எப்படி கட்டிச்சோறு