பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

பயன்படுகிறதோ அது போன்று இஸ்லாம் எனும் நேர்வழியில் இறையருள் பெறுவதை இலட்சியமாகக் கொண்டு வாழும் முஸ்லிமுக்கு ஈமான் இன்றியமையாததாகும் எனபதை எடுததுக் கூறியும் அதனை ஏற்காத தாகி பேருனர் வில் மூழ்கினான். ஆயுதமில்லா அலியாரை வாளால் வெட்ட வந்த தாகியை தரையோடு தரையாக வீழச் செய்கிறார். விரைந்து வந்த வடோச்சி தாகியின் தலையை வெட்டியெடுக்க அஃது இறையருளால் அலியார் தலை போன்ற தோற்றத்தைப் பெறுகிறது. அதனை இந்திரா யனிடம் காட்டி அவன் அழகு மகள் பனிமதியை மணமுடிக்க விரைந்து செல்கிறானf வடோச்சி.

தன் கணவனைப் போர்க்களத்தே இழந்த தாகியின் மனைவி தாங்கொணாத் துயருற்று,தாகியின் மரணத்தையும் அதன் தலையுடன் தாகி வரும், விவரத்தையும் கூறும் கடிதமொன்றைத் தன் தந்தை இந்திராயனுக்கு அனுப்பினாள். இத்துடன் நான்காவது படைப்போரின் கதை முடிகிறது.

இந்திராயனுக்கு அலியார் தலையுடன் வடோச்சி வந்திருக்கும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அளவிலா மகிழ்ச்சியுற்ற மன்னன் தன் மகள் பனிமதியை மணக்கத்தக்க மாவீரன் வடோச்சியே எனப் பாராட்டி அவர்தம் திரு மணத்திற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கப் பனிக்கிறான். திருமணச் செய்தியறிந்த பனிமதி, வடோச்சி கொண்டுவந்தது மாவீரர் அலியின் தலையாக இருக்க முடியாது எனத் தீர்க்கமாக தன் தோழியரிடம் கூறினாள்.

'சும்மா விருங்கள் தோன்றலலியார் தலையை
இம்மாநிலத்திலுள்ளோர் எவரேனும்வெட்டுவரோ
அம்மாடி சும்மா அறைந்தார்கள் பொய்யதனைத்
தெப் மாடிப் புந்தி சிறந்த இந்த இராஜாக்கள்
நிறையாய் அறிந்திலரோ நீதமுள்ள இராஜாக்கள்'

எனக் கூறி மறுத்ததாகப் புலவர் குறிக்கிறார்.