பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

ஆயினும் மன்னன் இந்திராயன் ஆணைப்படிதிருமண ஏற்பாடுகள் மும்முரமாகச் செய்யப்பட்டன. நகரத் தெருக்கள் தோரண அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்டன எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோட மக்கள் பூரிப்போடு ஆடிப்பாடி மகிழ்நதிருந்த வேளையில், தன் கணவனின் தலையை வெட்டிக் கொண்டு வந்து அலியாரின் தலை எனக் காட்டிய வடோச்சியை இனங்காட்டும தாகியின் மனைவி எழுதிய கடிதம் அவள் தந்தை இந்திராயனிடம் வந்து சேர்கிறது.

'சத்தி கெட்ட பாவியென்று தானவந்தே
எனனிடத்தில்
புத்திகெட்டிங்கு என் மருமகன் போந்ததலை கொண்டு
வந்தான்

எனக் கூறி கொதித்தெழுந்தான் தன் மருமகனின் தலையையே வெட்டி வந்து அலியார் தலையெனக் காட்டித் தன்னை ஏமாற்றி தன் இளையமகள் பனிமதியை மண முடிக்க முயன்ற வடோச்சியின் வஞ்சகச் செயல் கண்டு கொதித்தெழுந்த இந்திராயன் வடோச்சியை பழி தீர்க்கும் வகையில் வெட் டிக் கொள்ளத் தன் படையினர்க்கு ஆணையிட்டான். உண்மை நிலையை உணர்ந்த வடோச்சியும் இந்திராயனை எதிர்க்கத் துணிந்து, தன் படை யோடு கடுமையாகப் போரிட்டான். வெற்றி தோல்வி யாருக்கெனக் கூற இயலாத நிலையில் கடும்போர் நிகழ்ந்தது. இதனைக் கேட்டறிந்த பனிமதி தீன் நெறி சேர்ந்த வடோச்சி எப்பபடியும் போரில் வெற்றிபெறத் துணைபுரியுமாறு பெருமானாரை மனத்திலிருத்தி வல்ல இறைவனை வழுத்தினாள்.

இந்திராயனின் பெரும்படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் வடோச்சியை நிலை குலையச் செய்கிறது. போதிய படையோ, படைக்கருவிகளோ இல்லாத நிலையில் சோர்வுற்றவனாக இருந்த வடோச்சிக்கு மாவீரர் அலியின் நினைவு வருகிறது. இடருற்றபோது ஏந்தல் அலியாரை