பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136



நெறி போற்றியொழுக தூது அனுப்புகிறார் தூதுவர்களின் இன்மொழி கேட்ட இந்த ராயன் நபிகளாரின் நன்பொழியை , அலியாரின் அ ன்புரையைக் கேட்க மறுத்த உச்சிக்கும் தாகிக்கும. ஏற்பட்ட அவல முடிவை ஒரு கணம் எண்ணிப்பார்த்தான . அதே கதி தனக்கும் ஏற்படுவதை அறவே விரும்பாத இந்திராயன் இறைநெறி வழி ஒழுகி வாழ்வில் ஏறறம் பெற உறுதி கொண்டான். தான இஸ்லாத்தைப் பினபற்றி முஸ்லிம் ஆனதோடு தன் அன்பு மகள் பனிமதியை வடோச்சிக்கே மணமுடித்துக் கொடுத்து வாழ்த்தினான். பின்னர் மாநபியை நேரிற் கண்டு மகிழ பெருமானார் இந்த ராயனுக்குப் பரிசு பல அளித்து மகிழ்வித்ததாக இந்திராயன் படை ப்போர் முற்றுப் பெறுகிறது

"ஐந்து படைப்போர் இலக்கியம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கதையம்சத்தோடு விளங்குகிறது. இந் நூல் படிப்பறிவு மிக்க பண்டிதர்களைக் காட்டிலும் ஒரளவு படித்தறிந்த மக்களை மகிழ்விக்கும் வண்ணம் ஒசை நயமும் இனிய நடையும் எளிய சொல்லாட்சியும் கொண்டு விளங்குகிறதெனலாம். இதனாலேயே இஃது நாட்டுப்புற வர்ணனைகளில் சாதாரண நாட்டு வழக்குச் சொற்களும் அனறாட வாழ்வில் பாமர மக்களால் பயன் படுத்தப்படும் பழமொழிகளும் தாராளமாகக் கையாளப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சந்த நயமிக்கக் கண்ணிகளால் பாடம்பெற்ற ஐந்து படைப்போர்' சாதாரணமாக வாய்விட்டு இசை நயத் தோடு படிப்பதற்கு மிகச் சிறந்த நூலாகும். அதோடு வில்லுப் பாட்டாக இசைப்பதற்கும் ஏற்ற நூலாக விளங்குகிறது.

அநீதியை அகற்றி நீதியை நிலைநாட்டுவதையும் வழி தவறிச் செல்வோரை நேர்வழிக்குத் திருப்ப முயல் வதையும் எச்சமயத்திலும் போரைத் தவிர்த்து சமாதான வழியில் வாழத் தூண்டுவதையும் தவிர்க்க முடியாத நிலை-