பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

தூதர் ஏந்தல் நபியைக் காணச் செல்லும் நோக்கைக் கூறினார். இவ்வுண்மை அறியாது சிறைப்படுத்தப்பட்ட தன் மைந்தனையும் விடுவிப்பதோடு தாங்கள் அண்ணலாருக்கென கொண்டு செல்லும் பரிசுப் பொருள்களையும் திரும்பத் தருமாறு வேண்டிநின்றார்.

இதைக்கேட்ட அபுசுப்யானின் மருமகனான அப்துர் ரஹ்மான்,

"அவ்வுரை தனைக்கேட் டர சப்துர்-ரகுமான்
      அகுமது நபி நமக் கிவைதாம்
இவ்வழி கொடு நீ போவதை அறிந்தே
      இன்னணம் முடித்தனன் உனது
செவ்விய மகவை விடுவதும் இலைநீ
     சிறுவனை இழந் துயிருடனே
நெளவிமெய் யிறசூல் மதினா நகர்க்கே
    செல்கென நவின்றனன் இரங்கான்"

எனக் கூறியபோது தான் இஸ்லாத்தின் விரோதியாக அப்துர் ரஹ்மான் விளங்குவதை அறிய முடிந்தது. மனம் வருந்தினார். தன்னிடமிருந்து கொள்ளையடித்த பெருமானார்க்குரிய பரிசுப் பொருகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன் அருமை மைந்தரையும் தன்னையும் விடுவிக்குமாறு மன்றாடி நின்றார். அவரது உருக்கமான வேண்டுகோள் அப்துர் ரஹ்மானின் மனதைச் சிறிது அசைத்தது. ஓரளவு மனமிரங்கியவராய், யெமன் நாட்டு மன்னரை மட்டும் விடுவிப்பதாகவும், அவர் மைந்தரை விடுவிக்க வேண்டுமெனில் தான் கேட்கும் பணயப் பொருள்களை குறிப்பிட்ட கால எல்லைக்குள் கொண்டு வந்து கொடுப்பின் மைந்தரை விடுவிப்பதாகவும் கூறி தந்தையை மட்டும் விடுதலை செய்து அனுப்பினார் அப்துல் ரஹ்மான்.

சிறைப்பட்டு வருந்தி நிற்கும் தன் மைந்தனை எண்ணி நெஞ்சம் பதைத்தார் அசுமத். தன் மைந்தனை மீட்கும்