பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வழியாது திகைத்தார். இறுதியில் அண்ணலாரிடமே உதவி பெற விழைந்தார். மதினமா நகர் சென்று, நாயகத் திருமேனியிடம் நடநதவற்றை விவரித்தார். குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பயணப் பொருள் தரவில்லையெனில் தன் மைந்தர் உயிர் பறிபோகுமென்பதை நினைவூட்டி, தன் செல்வ மகளை மீட்டுத் தந்து தன் குலந்தழைக்க உதவுமாறு பெருமானாரிடம் மன்றாடி நினறார். தன் மகனை மீட்டு உயிர்ப்பிச்சைத் தருமாறு உருக்கமாக வேண்டி நிற்கும் தந்தையின் கண்ணீரும் வேண்டுகோளும் அண்ணலாரின் உள்ளத்தை மெழுகென உருக்கியது. இக் கொடுஞ்செயல் கேட்டு நபித்தோழர்களில கொதித்தனர் சிலர், கண்ணீர் உகுததனர் பலர். இதனை,

"இன்னணம் அசுமத்தோத எழில்நபி இறசூலுல்லா
தன்னுளம் பெருக வாடிச் சலித்தனர் அவையிலுற்ற
மின்னென அவனிஏந்தி விறல் மனம் நிறைந்ததீனின்
மன்னவரெவரும் ஏங்கி வாய்விடுத் தழுவதானார்"

எனக்கூறி அங்கு ஏற்பட்டிருந்த துன்பச் சூழலை அப்படி யே சொல்லோவியமாகக் கூறிவிடுகிறார் குஞ்சுமூசுப் புலவர் அவர்கள்.

அதன் பின்னர் பெருமானார் அலி அவர்களை அழைத்து, மைந்தரின் நினைவாய் வருந்தி நிற்கும் அசுமத்தைத் தன் மனைக்கு அழைத்துச் சென்று அறுசுவை உணவளித்துப் உபசரிக்குமபடி பணித்தார்.

ஆயிஷா நாயகியாரின் மனையில் இருந்த அண்ணலாரை காண வந்த அபூபக்கர் சித்திக் அவர்களிடம் மென்ய நாட்டு மன்னன் அசுமத்தும் அவர் தம் மைந்தரும் அப்துல் ரஹ்மானிடம் பட்டபாட்டையும் இழப்பையும் ஏற்றஇன்னல்களையும்பற்றிஎடுத்துக்கூறினார். 'வெவ்விய