பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

இஸ்லாத்தின் பக்கம் அபூபக்கர் சேர்ந்ததைக் கடிந்து பேசுகிறார். இதைக் கேட்ட அபூபக்கர் சித்தீக் (ரலி) இஸ்லாத்தின் மேன்மையையும் பெருமானாரின் பெருமையையும் தீன் நெறியின் சிறப்புக்களையும் எடுத்து விளக்கிக் கூறினார். சிந்தனைத் தெளிவு பெற்ற முர்ரத் அக்கணமே உண்மை உணர்ந்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார்.

முர்ரத் இஸ்லாத்தைத் தழுவிய இனிக்கும் செய்தியை பெருமானாருக்குச் சொல்ல நண்பரோடு மதினமாநகர் திரும்பி அண்ணலாரிடம் நடந்தவற்றைக் கூறினார். அபூபக்கர் பின்னர் முர்ரத்தைத் தன் இல்லம் அழைத்துச் சென்று அறுசுவை உண ஆட்டி, தன் மகன் அப்துர் ரஹ்மான் பற்றி விசாரித்தார்.

முர்ரத் இஸ்லாத்தின் எதிரியான அபுசுப்யானின் மகளை மணமுடித்து மலைநாட்டுச் சாரலில் வாழ்ந்து வரும் அப்துர் ரஹ்மானின் வாழ்க்கைப் போக்கையும் அங்குள்ள சூழலையும் எடுத்துக் கூறி விளக்கினார்.

அதைக் கேட்ட அபூபக்கர் சித்திக் (ரலி) தன் மைந்தனை மருள் நெறியினின்றும் மீட்டு அருள் நெறியாம் இஸ்லாத்தின் பால் செலுத்தத் தான் அவாவி நிற்ப்தையும் அதற்குரிய யோசனை கூறுமாறு கேட்டார். அதற்கு முர்ரத.

"உங்கள் திருநாமமுற ஓலைதருவீரேல்
அங்கவன் இடத்தினில் அடைந்ததை அளித்தே
பொங்கமுத நன்மொழி புகன்று மறுசெய்தி
செங்கையின் முடங்கல்கொடுசேர்வன இவண் என்றார்’

தனயன் நல்வழிப்பட தந்தையும் தாயும் மடல் வரைந்து கொடுப்பின் அதைத் தானே எடுத்துக் கொண்டு, தூது சென்று மகனை நேர்வழிக்கு அழைத்து வருவதாகக் கூறினார் முர்ரத். இந்த யோசனை அபூபக்கர்சித்தீக்(ரலி)