பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

"உன்னுடன் பிறந்தொளி இலங்கும் ஆயிஷா
என்னும் என்புதல்வியை இறைவன் துாதுவர்
முன்னுதித் தவரருள் முரசலாகிய
மன்னர் மன்னபி திருமணம் புரிந்தனர்

வள்ளல் என்புதல்வியை மணந்து வாழ்வதால்
தெள்ளிய பதவியும் சிறப்பும் செல்வமும்
விள்ளரும் தலைமையும் விரலும் மேன்மையால்
உள்ளதிங் குனக்குமுன் தனக்கும் உற்றதே

மறைநபி எமக்கொரு மருகர் ஆனதால்
இறையவன் கருணையும் இலங்கும் ஏமநாடு
உறைவதற் குதவியும் உயர் அறங்களும்
குறையறப் படைத்தனன் கருணை மைந்தனே

எவர்க்கு மன்னபியென இறை அனுப்பியிங்கு
அவர்க்கருள் மறைக் கலிமா அறைந்தவர்
பவக்கடல் கடந்து அரும்பசும் பொனால் அமை
சுவர்க்க நன்னகர் மனைச் சுகத்தில் எய்துவார்."

என அழகுற மொழிகிறார். நாயகத் திருமேனியின் நல்வழி நடப்போர் வாழ்க்கையின் எல்லாப் பேறுகளையும் எளிதாகப் பெற்று இன்புறுவர் என்பதையும் தன் குலச்செல்வி ஆயிஷாவை பெருமானார் மணந்ததன் மூலம் தன் குலம் பெற்ற பெரும் பேற்றையும் மகனின் உள் மனத்தில்சென்று தங்கும் வண்ணம் நளின நடையில் எழுதினார்.

இறை துாதரின் தீன் நெறிக்குப் புறம்பாக வாழமுனைவோர் பெறப்போகும் பெருந்துயரம் எத்தகையது என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் தொடர்ந்து,

"ஆதியை அகுமதை அறிந்திறைஞ்சிலாப்
பாதகப் பணியினர் பணியும் தேள்களும்
ஓதரும் எரியும் ஒன்றாக வுற்றபல்
வேதனை மிகுந்த வெந்நரகில் வீழ்குவார்"