பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149


எனக் கூறுவதன் மூலம் அடாத செயல் செய்து நல்லோர் உள்ளங்களை வேதனைக்காளாக்கிவரும் தன் மைந்தனை அச்சுறுத்தி எச்சரிக்கிறார். குபிர்வழி வாழ்வோர் இறுதியில் எரி நரகில் வீழ்ந்து படும் துன்பங்களை அடுக்கிக்கூறி, தன் மைந்தனை நல்வழிப்படத் துாண்டுகிறார் அத்துடன் பெருமானார் காட்டும் பெருவழியாகிய இஸ்லாத்தின் பாதையில் நடந்து தீன் நெறி போற்றுமாறு வேண்டுகிறார்.

"ஆகையால் எனதுதன் அருமை மைந்தனே
தோகை ஆமீனத்தருள் தோன்றல் நாயகம்
மேகமார் குடைநபி வேந்தர் தீன்வழி
வாகுசேர் கருத்துடன் வருதல் வேண்டுமால்”

தந்தையும் தாயும் தம் மைந்தருக்கு உள்னமுருக, அதே சமயத்தில் தவறான பாதையில் செல்வதால் விளையவிருக்கும் பெருங்கேட்டினை எடுத்துக் காட்டியும் அண்ணலைக் காணவந்த அன்பர் அசுமத அடைந்துள்ள துயர நிலையையும் சுட்டிக்காட்டி. அசுமத் மகனையும் கொள்ளைப் பொருளையும் திரும்ப ஈந்து, நபிவழி நின்று இறையருள் பெற வழிகாட்டி எழுதிய இரு மடல்களையும் எடுத்துக் கொண்டு தூதுவராக அப்துர் ரஹ்மான் வாழ்விடம் நோக்கிச் சென்றார் முர்ரத்

சோலை சூழ் மதினாவை விட்டுட பாலைவழி செல்லும் முர்ரத்தின் பயணப் பாதையாகிய, பாலையின் கொடூரத்தைச் சொல்லோவியமாகத் தீட்டி, நம்மையே பாலையில் பயணம் செய்யும்படி செய்துவிடுகிறார் புலவர் பாலையின் வெப்பம் நஞ்சுண்ட நரகம்போல் உள்ளதாம். வெம்மை தாங்காது விரைந்தோடும் குதிரையின் வாய்வழி வெளிப்படும் வெப்பமூச்சு நிலவுலகே உருகியோடும் உலைக்கள அனல் போன்றுள்ளதாம். கடிதங்களைக் கொண்டு செல்லும் தூதுவர் கடந்து செல்லும் பாலை வழி.