பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152


எத்தகையது என்பதை எடுத்துக் கூறினார். கருணை நபி வழி நடக்கும் அவர்தம் புகழைப் போற்றிப் பேசினார். முப்பது வீரர்கள் ஒருசேர முயன்றாலும் தன் தந்தையின் முடியொன்றைக்கூட அகற்றமுடியாதென்பதை ஆக்ரோசத்துடன் எடுத்துக் கூறினார். அப்துல் ரஹ்மானின் கடுஞ்சினத்தை,

“அப்பொழுது அவனை நோக்கி
அடவரி கடுப்பச் சீறி
மெய்ப்புக ழுடைய தாதை
விரல்வலிப் பெருமை வீரம்
செப்பியங் கவர்தே கத்தின்
சிறுமுடி யொன்று நின்போல்
முப்பது பெயர் சென்றாலும்
முறிப்பதற் கரிதென் றாரால்”

எனச் சொல்லோவியமாகத் தீட்டி அவரின் சீற்றமிகு தோற்றத்தையே நமக்குப் படம் பிடித்துக் காட்டிவிடு சிறார்புலவர்

இவ்வுரை கேட்டு வெகுண்ட அபுசுப்யான் சினத்தின் எல்லைக்கே சென்றவனாய் பேரதிர்ச்சியுடன் வந்தவழி நோக்கி நடக்கலானான்.

அப்துல் ரஹ்மானின் உள் மனத்தை மூடியிருந்த இருள் படலம் கொஞ்ச கொஞ்சமாக விலகத் தொடங்கியது. அதுவரை மனத்துள் அடைப்பட்டுக் கிடந்த பெற்றோர் பாசம் அவரை முழுமையாக ஆட்கொண்டது தன் சுற்றத்தின் நலத்தையெல்லாம் பற்றி தூதுவந்த மூர்ரத்திடம் ஆவல் பொங்கக் கோட்டார். அதுவே அருமையான தருணம் என எண்ணிய துரதர் முர்ரத் அன்புத் தந்தை அபூபக்கர் சித்தீக் (ரலி)கும் அருமைத் தாயாரும் எழுதியனுப்பியிருந்த பாசமிகு கடிதங்களை அப்துல் ரஹ்மானின் கையிற் கொடுத்தார்.